‘ஜெயிலர்’லாம் அப்புறம்.. முதல்ல ஜவானை ஜெயிக்கணும்!. இது என்னடா லியோவுக்கு வந்த சோதனை!…

Published on: September 24, 2023
leo
---Advertisement---

Jawan Leo : தான் நடிக்கும் படம் வெற்றியடைய வேண்டும் என்பதை தாண்டி இப்போதெல்லாம் ஒரு பெரிய நடிகரின் படம் வெளியானால், அது மற்ற அல்லது அவரின் போட்டி நடிகரின் பட வசூலை தாண்ட வேண்டும் என்பதே பல நடிகர்களின் குறிக்கோளாக இருக்கிறது.

ஏனெனில் போட்டி நடிகரின் பட வசூலை விட குறைவான வசூலை பெற்றால் அது சம்பந்தப்பட்ட நடிகருக்கு கவுரவ பிரச்சனையாகவும் இருக்கிறது. இது இப்போது இல்லை. எம்.ஜி.ஆர் – சிவாஜி காலத்திலிருந்து இருக்கிறது. அதன்பின் ரஜினி – கமல் இதை தொடர்ந்தனர். இப்போதும் இது தொடர்கிறது.

இதையும் படிங்க: பட்ஜெட்டோ பல கோடி!.. பக்கா ஸ்கெட்ச்!. பேன் இண்டியா போஸ்டர்!.. கல்லா கட்டுமா லியோ!..

ரஜினி எப்போதோ கமலை ஓரங்கட்டிவிட்டார். அவரின் படங்கள் கமல் படங்களை விட அதிக வசூலை பெற்றது. சம்பளத்திலும் கமலை விட ரஜினிக்கு பல மடங்கு அதிகம். ஆனால், லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்து வெளியான விக்ரம் திரைப்படம் ரஜினி படங்கள் இதுவரை வசூலை விட பல மடங்கு வசூலித்தது. இப்படத்திற்கு பின் கமலும் தனது சம்பளத்தை ரூ.130 கோடியாக உயர்த்திவிட்டார்.

சினிமாவில் வெற்றிதான் முக்கியம். வெற்றியை வைத்துதான் அங்கு எல்லாமே தீர்மானிக்கப்படும். தற்போது ஜெயிலர் படத்தின் வசூல் விக்ரமை தாண்டிவிட்டது. இந்த போட்டி தொடர்ந்து கொண்டெ இருக்கும். இதற்கு முடிவே கிடையாது. ரஜினியின் கடைசி சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே, விஜய்தான் சூப்பர்ஸ்டார் என்று பலரும் பேச துவங்கினார். ஆனால், ஜெயிலர் வெற்றி மூலம் தனது இடத்தை தக்க வைத்துகொண்டார் ரஜினி.

இதையும் படிங்க: ‘லியோ’ ரிலீஸுக்கு வந்த சிக்கல்! சொன்ன தேதியில் வெளியிட முடியாமல் தவிக்கும் படக்குழு

தற்போது லியோ படம் ஜெயிலர் பட வசூலை தாண்ட வேண்டும். இல்லையேல், ரஜினியோடு விஜயை ஒப்பிட்டு பேசுவார்கள். ஏற்கனவே ஜெயிலர் பட விழாவில் பருந்து – காக்கா கதையெல்லாம் சொல்லி ரஜினி விஜய் ரசிகர்களை கோபப்படுத்திவிட்டார். விஜய்க்கும் லியோ பட ரிசல்ட் ஒரு கவுரவ பிரசச்னைதான். இந்த படம் ரூ.1000 கோடி வசூலை தொட வேண்டும் என அவரும் ஆசைப்படுகிறார்.

ஆனால், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் 1000 கோடியை நெருங்கிவிட்டது. ரூ.935 கோடி வசூலை இப்படம் தாண்டிவிட்டது. எனவே, ஜெயிலர் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு படங்களின் வசூலையும் லியோ படம் தாண்டினால்தான் விஜயின் மாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

லியோ வெளியாகும் அக்டோபர் 19ம் தேதி இதற்கான பதில் தெரிந்துவிடும்.

இதையும் படிங்க: எப்பா இது ஆடியோ லாஞ்ச் இல்ல! கட்சி மாநாடு – இப்படி ஒரு ப்ளானோடு விஜய் இருப்பாருனு எதிர்பார்க்கல

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.