சொகுசு கார்.. சொந்தமா பண்ணைத் தோட்டம்!.. என்னம்மா வாழுறாருப்பா ஜிபி முத்து!.. புது வீடியோ பார்த்தீங்களா?..

Published on: September 25, 2023
---Advertisement---

டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கடந்த சீசனில் கலந்து கொண்டார். இந்தாண்டு அஜித்தின் துணிவு, பா பா பிளாக் ஷீப் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார்.

யூடியூப் சேனலில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வரும் ஜி பி முத்து சமீபத்தில் KIA காரை வாங்கிய வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்நிலையில், புதிதாக தோட்டம் அமைக்க இடம் ஒன்றை வாங்கி இருப்பதாக தனது லேட்டஸ்ட் வீடியோவில் அந்த இடத்தில் இருந்தபடியே எடுத்த காட்சிகளை வெளியிட்டு தனது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Also Read

இதையும் படிங்க: களைகட்டும் லியோ ஆடியோ லான்ச் வேலை!.. வெளியான வீடியோ!.. என்னென்னமோ சொன்னாங்களே!..

தனக்கு வரும் கடிதங்களை ஆபாச வார்த்தைகளுடன் கலந்து வட்டார வழக்கில் பேசி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர் ஜி பி முத்து. அவர் சொல்லும் “ செத்த பயலே.. நார பயலே“ வசனம் ஏகப்பட்ட ரசிகர்களை அட்ராக்ட் செய்திருந்தது.

சினிமாவிலும் சில படங்களில் அதே வசனத்தை பேசி நடித்துள்ளார். பிக் பாஸ் பிராப்ளம் ஆன நிலையில், ஏகப்பட்ட பட வாய்ப்புகள். ஏகப்பட்ட நிகழ்ச்சிகளில் சிறப்பு பங்கேற்பாளர் அழைப்பது என எல்லா பக்கமும் ஜி பி முத்துக்கு வருமானம் வந்து கொண்டிருக்கும் நிலையில், புதிதாக சொகுசு காரை வாங்கியதை தொடர்ந்து சொந்தமாக 40 சென்ட் நிலத்தை வாங்கி, அதிலிருந்த கருவேல மரங்களை ஜேசிபி கொண்டு அகற்றும் காட்சிகளை தற்போது வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அந்த இயக்குனர் படத்துக்கு ரெடியான சிவகார்த்திகேயன்!. என்ன சொல்லி இருக்கார் பாருங்க!…

புதிதாக வாங்கிய 40 சென்ட் நிலத்தில் தோட்டம் அமைக்கப் போவதாகவும், நீச்சல் குளம் கட்டி தனது குடும்பத்துடன் விளையாட போவதாகவும் அந்த வீடியோவில் ஜி பி முத்து கூறியுள்ளார். கருவேல மரங்கள் நம் மண்ணை மலடாக்கி வருகிறது. முடிந்தவரை அதனை அகற்ற வேண்டும் சமூக கருத்தையும் கூறியுள்ளார்.

ஜி பி முத்துவின் இந்த வளர்ச்சியை பார்த்து ரசிகர்கள் அவர் மென்மேலும் வளர வேண்டும் என வாழ்த்தி வருகின்றனர்.