ஹீரோவாகவும் ஜெயிக்கல! டைரக்‌ஷன்லயும் தோத்துட்டா தாங்கமாட்டாரு – பாரதிராஜாவை பற்றி மகன் உருக்கம்

Published on: September 26, 2023
bharathi
---Advertisement---

Manoj Bharathiraja: தமிழ் சினிமாவில் என்றும் நினைவில் இருக்கக்கூடிய இயக்குனர்களில் பாரதிராஜா முக்கிய பங்கு வகிக்கிறார். இவரின் இயக்கத்தில் ஏராளமான பல நல்ல நல்ல படங்களை நாம் பார்த்து ரசித்திருக்கிறோம். அவர் இயக்கிய பெரும்பாலான படங்களை காவியம் என்றே சொல்லலாம்.அந்தளவுக்கு பாரதிராஜா மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார்.

அவருடைய மகனும் நடிகருமான மனோஜை வைத்து தாஜ்மஹால் என்ற படத்தை இயக்கினார் பாரதிராஜா. அந்தப் படத்தின் மூலம்தான் முதன் முதலில் மனோஜ் நடிகராக அவதாரம் எடுத்தார். தாஜ்மஹால் படம் இன்றளவும் இளைஞர்கள் கொண்டாடும் படமாகவே கருதப்படுகிறது.

இதையும் படிங்க: புதிய அவதாரம் எடுக்கும் நெல்சன்!. ஆனா அதுக்கும் பெரிய மனசு வேணும்!.. செம கிரேட்டுப்பா!..

தாஜ்மஹாலை அடுத்த அல்லிஅர்ஜூன், வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம் போன்ற பல படங்களில் மனோஜ் நடித்திருக்கிறார். ஆனால் அவருடைய ஆசையே ஒரு இயக்குனராக வேண்டும் என்பதுதான். பாரதிராஜாவின் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த சிகப்பு ரோஜாக்கள் படத்தை மீண்டும் இயக்க விரும்பினார் மனோஜ்.

ஆனால் அந்தப் படம் ஏதோ ஒரு காரணத்திற்காக தள்ளிக் கொண்டே போவதாக மனோஜ் கூறினார். ஆனால் 13 வருடங்களுக்கு முன்பாகவே சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான முழு ஸ்கிரிப்டையும் எழுதிவிட்டாராம் மனோஜ். அது அப்படியே இருக்கட்டும் என மனோஜ் கூறினார்.

இதையும் படிங்க: சொகுசு கார்.. சொந்தமா பண்ணைத் தோட்டம்!.. என்னம்மா வாழுறாருப்பா ஜிபி முத்து!.. புது வீடியோ பார்த்தீங்களா?..

இந்த நிலையில் புதுமுகங்களை வைத்து மார்கழி திங்கள் என்ற படத்தை இயக்கியிருக்கிறார் மனோஜ். இதன் மூலம் இயக்குனராக தன் அறிமுகத்தை பதிவு செய்கிறார் மனோஜ். இந்தப் படத்தை சுசீந்திரனின் வெண்ணிலா கிரியேசன்ஸ் தான் தயாரிக்கிறதாம். இளையராஜா இசையமைக்கிறாராம். பாரதிராஜாவும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறாராம்.

இந்தப் படத்தை பாரதிராஜாவின் மனோஜ் கிரியேஷன்ஸ் மூலமாகவே தயாரித்திருக்கலாமே? ஏன் வேறொரு நிறுவனத்தின் மூலம் படத்தை எடுக்கிறீர்கள் என கேட்டதற்கு ‘ நான் தான் அப்படி ஒரு முடிவை எடுத்தேன். ஏற்கனவே என்னை நடிக்க வச்சு அப்பா தோத்துட்டாரு. இப்பொழுது என்னை இயக்குனராக அறிமுகப்படுத்தி அதுலயும் தோத்துட்டா அதை தாங்குற சக்தி அவருக்கு இல்லை.அதனால்தான் தனியாக நின்று ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே எங்கள் நிறுவனத்தில் படத்தை தயாரிக்கவில்லை ’ என்று மனோஜ் கூறினார்.

இதையும் படிங்க: ‘வணங்கான்’ திரைப்படத்தின் கதை இதுதான்! போஸ்டரின் மூலம் மிரட்டிய பாலா – வைரமாவாரா அருண்விஜய்?

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.