‘வணங்கான்’ திரைப்படத்தின் கதை இதுதான்! போஸ்டரின் மூலம் மிரட்டிய பாலா - வைரமாவாரா அருண்விஜய்?

Vanagan movie: இன்று வணங்கான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகவும் பேசு பொருளாக மாறியிருக்கிறது. பாலாவின் இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் வணங்கான். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பேட்ஜ் வேலைகள் நடந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் வைரமுத்துவின் வரிகளில் வணங்கான் திரைப்படம் ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்த நிலையில் படத்தின் போஸ்டரை பற்றி பலவிதமான கருத்துக்கள் சொல்லப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: கதையை கேட்டு கடுப்பான ரஜினிகாந்த்… அப்புறம் எப்படி ஹிட் ஆச்சு தெரியுமா?.. அட அந்த படமா?!..

இதை பற்றி ஒரு சினிமா பத்திரிக்கையாளர் கூறும் போது ‘வணங்கான் திரைப்படத்தின் போஸ்டரை பற்றி குறிப்பிடும் போது ஒரு கலைஞனை பொறுத்தவரைக்கும் கடவுளும் ஒன்றுதான். கற்சிலையும் ஒன்றுதான் என்பதை விளக்கும் ஒரு முற்போக்கு சிந்தனையை கருவாக வைத்துதான் பாலா இந்தப் படத்தை கொண்டு வரப் போகிறார்’ என அந்த பத்திரிக்கையாளர் கூறினார்.

இதற்கு முந்தைய பாலாவின் படங்கள் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு மாதிரியான கதைகளில் படங்கள் வெளிவந்திருக்கும். ஆனால் இந்த வணங்கான் திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் ஒரு ஆணித்தரமான முற்போக்கு சிந்தனையை விதைக்கிற மாதிரிதான் படத்தை எடுத்திருக்கிறார் என்பதை இந்தப் படத்தின் போஸ்டர் விளக்குகிறது என்றும் அந்த பத்திரிக்கையாளர் கூறினார்.

இதையும் படிங்க: களைகட்டும் லியோ ஆடியோ லான்ச் வேலை!.. வெளியான வீடியோ!.. என்னென்னமோ சொன்னாங்களே!..

மேலும் கால் நூற்றாண்டுகளில் வெறும் 9 படங்களை மட்டுமே கொடுத்து இன்று தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியிருக்கிறார் என்றால் எந்தளவுக்கு ஒரு தாக்கத்தை தன் படங்களின் மூலம் பாலா சொல்லியிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

அதுமட்டுமில்லாமல் அவர் படங்களில் ஏதோ சினிமாவிற்கு வந்தோம், நடித்தோம் என்ற மன நிலையில் இருக்கும் நடிகர்கள் எல்லாம் எளிதில் நடித்துவிட முடியாது. பாலா ஒரு நடிகரை தன் படத்தின் ஹீரோவாக ஒப்பந்தம் செய்து விட்டால் கண்டிப்பாக அந்த நடிகர் எதிர்காலத்தில் ஒரு சிறப்பு மிக்க திறமை மிக்க நடிகராகத்தான் வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க: உன்னால புரொடியூசர் நஷ்டம் ஆகணுமா?… வெண்ணிறாடை நிர்மலாவிற்கு கண்டிஷன் போட்ட எம்.ஜி.ஆர்…

அதற்கு உதாரணமாக சூர்யா, விக்ரம், விஷால் போன்ற நடிகர்களை குறிப்பிடலாம். அந்த வகையில் இப்போது அருண்விஜயும் இணைந்துள்ளார். ஒரு சாதாரண களிமண்ணைக் கொடுத்தாலும் பாலா அதை வைரமாக்கி தருபவர். அதில் நல்ல திறமையான அருண்விஜய் இணையும் போது படத்தை பற்றி சொல்லவா வேண்டும். இந்த ஒரு போஸ்டர் மூலம் ஒட்டுமொத்த சினிமாவையும் பேச வைத்து விட்டார் பாலா.

 

Related Articles

Next Story