Connect with us

latest news

இது சந்திரமுகியும் காஞ்சனாவும் கலந்த கலவைடா!.. எப்படி இருக்கு வேட்டையன் ஆட்டம்.. சந்திரமுகி 2 விமர்சனம்!

ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தில் ராகவா லாரன்ஸ் நினைத்து கூட பார்க்க முடியவில்லையே என ரசிகர்கள் நினைத்தாலும் சந்திரமுகி 2 எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்து விட வேண்டும் என்கிற ஆவலை நிச்சயமாக படம் தூண்டியது.

இந்த வாரம் மிகப்பெரிய விடுமுறை வாரம் என்பதால் சந்திரமுகி 2 திரைப்படம் வசூலில் கல்லா கட்டும் என்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. படம் பெருசாக இல்லையென்றாலும் சந்திரமுகி மற்றும் காஞ்சனாவின் கலவையை கலந்து ஒரு பக்காவான கமர்சியல் மசாலா படத்தை இயக்குனர் பி வாசு கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கோலிவுட்டில் பெற்றோரை மிஞ்சிய பிள்ளைகள்! நம்ம பிள்ளைதானா என ஆச்சரியப்பட வைத்த சூர்யா

ராதிகா சரத்குமார் தனது பெரிய குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் வருவதைப் பார்த்து சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் சாமியார் ஒருவர் வேட்டைய புறத்தில் உள்ள குலதெய்வக் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த சொல்கிறார்.

சந்திரமுகி முதல் பாகத்தில் முருகேசன் ஆக வந்த வடிவேலு வேட்டை புரம் அரண்மனையில் ராதிகா சரத்குமார் குடும்பத்தை தங்க வைக்க மீண்டும் சந்திரமுகியின் ஆட்டம் ஆரம்பம் ஆகிறது.

இதையும் படிங்க: ராரா பாட்டை இதுலயும் வச்சிருக்கலாம்!.. சந்திரமுகி 2- பார்த்த ரசிகர்கள் சொல்வது இதுதான்!.. டிவிட்டர் விமர்சனம்….

முதல் பாகத்தில் கங்கா எப்படி சந்திரமுகியாக மாறினார் என சைக்கோ ரீதியான படத்தைக் கொடுத்து பாராட்டுக்களை அள்ளிய பி. வாசு இந்த முறை காஞ்சனா போல சந்திரமுகியையும் பேயாக மாற்றி பதற வைத்துள்ளார்.

இடைவேளை ட்விஸ்ட் உடன் இரண்டாம் பாதியில் சந்திரமுகியாக கங்கனா ரனாவத் வருவது படத்தை மேலும், பிரம்மாதப்படுத்துகிறது. தலைவி படத்தில் நடித்ததை விட இந்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என கங்கனா ரனாவத் ரொம்பவே மெனக்கெட்டு மிரட்டியிருக்கிறார்.

இதையும் படிங்க: படம் ஓகே!.. ஆனால், சித்தார்த் இந்த சிக்கலை ஏன் கவனிக்கல?.. சித்தா விமர்சனம் இதோ!

ராகவா லாரன்ஸும் வேட்டையனாக மாறி கங்கனா ரனாவத்தின் நடிப்புக்கு தனக்கு தெரிந்த காஞ்சனா ஸ்டைல் நடிப்பைத் தூவி கரெக்ட் செய்திருக்கிறார். ஆனால், வடிவேலுவை நம்பி போன ரசிகர்களின் கதி தான் அதோகதியாக மாறியுள்ளது.

ஆஸ்கர் வாங்கிய கீரவாணி தெலுங்கு சந்திரமுகிக்கு இசை அமைத்தாலும், தமிழ் ரசிகர்கள் ரசிக்கும் படி வித்யாசாகர் முதல் பாகத்துக்கு அமைத்த பாடல்களில் ஒன்றுக்கு கூட ஈடாகவில்லை. கங்கனா ரனாவத் நடனத்தை ரசிக்க முடிகிற அளவுக்கு கூட பாடல் ஈர்க்கவில்லை.

சந்திரமுகி 2 – செயற்கைத்தனம்

ரேட்டிங் – 3.25/5.

author avatar
Saranya M
Continue Reading

More in latest news

To Top