கூசும்ப்ஸ்.. வெறித்தனம்!.. வெளியானது லியோ பட ‘பேடாஸ்’ பாடல் வீடியோ..

Published on: September 28, 2023
badass
---Advertisement---

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும், பிரியா ஆனந்த் உள்ளிட்ட சில நடிகைகளும் நடித்துள்ளனர்.

அதேபோல் அர்ஜூன், மிஷ்கின், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் என பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். பல நடிகர்களும் இப்படத்தில் நடித்திருப்பதால் இப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இப்படத்தை காண விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: காண்டாக்கிய இறைவன்!… கல்லாகட்ட போகும் சந்திரமுகி 2.. ராகவா லாரன்ஸுக்கு எங்கயோ மச்சம்!..

லியோ படத்தில் மொத்தம் 2 பாடல்கள் என சொல்லப்படுகிறது. இதில், ‘நான் வரவா’ பாடல் ஏற்கனவே வெளியாகி விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது ரிலீசுக்கான வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 30ம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது.

இது விஜய் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. எனவே, அவர்களை கூல் பண்ணும் வேலையில் படக்குழு இறங்கியுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘பேடாஸ்’ பாடல் வரிகள் வீடியோவை இப்போது வெளியிட்டுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: ரசிகர்களை காப்பாத்த இறைவன்தான் வரணும்! – ஜெயம் ரவின் ‘இறைவன்’ பட விமர்சனம் இதோ!…

லோகேஷ் கனகராஜ் படங்களில் இப்படி ஒரு பாடல் வரும். விக்ரம் படத்தில் கூட ‘போர்க்கொண்ட சிங்கம்’ பாடல் வரும். அதுபோலவே இந்த பாடலும் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய் வெகுண்டெழுந்து வில்லன்களை போட்டு தள்ளும்போது இந்த பாடல் ஒலிபரப்பாகும் என கணிக்கப்படுகிறது.

லியோ இசை வெளியீட்டு விழா நடக்கவில்லை என்கிற சோகத்தில் இருந்த விஜய் ரசிகர்களை தெம்பூட்டும் விதமாக இந்த வீடியோவை தயாரிப்பாளர் தரப்பு வெளியிட்டுள்ளது. விஜய் ரசிகர்களும் இதைப்பார்த்து ‘கூசும்ப்ஸ்.. வெறித்தனம்’ என்றெல்லாம் ஃபயர் விட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: இது சந்திரமுகியும் காஞ்சனாவும் கலந்த கலவைடா!.. எப்படி இருக்கு வேட்டையன் ஆட்டம்.. சந்திரமுகி 2 விமர்சனம்!

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.