Connect with us

latest news

சிரிப்ப அடக்க முடியல!.. சந்திரமுகி 2வை வச்சு செய்யும் ரஜினி ரசிகர்கள்!.. அந்த டைனோசர் மீம் தான் ஹைலைட்!.

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி 2 திரைப்படத்தை ரஜினிகாந்த் ரசிகர்களே பங்கமாய் கலாய்த்து வருகின்றனர்.

சந்திரமுகி என்றால் ஜோதிகாதான் என்றும் வேட்டையன் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டுமே என்றும் வேற யாரும் அந்த கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடிக்க முடியாது என ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திரமுகி 2 படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கப் போவதாக வெளியானதில் இருந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதையும் படிங்க: பொங்கலுக்கு சம்பவம் காத்திருக்கு… மிரட்டலாய் வெளியான அரண்மனை4 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…

இந்நிலையில், படம் வெளியான பின்னர் சந்திரமுகி 2 எப்படித்தான் இருக்கிறது என பார்க்க நினைத்த ரசிகர்கள் “ என்ன கொடுமை சரவணன்” என்கிற ட்ரோல் மீம்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும், நடிகர் ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி ரியல் டைனோசர் என்றும் ராகவ லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 பொம்மை படம் என அடி வெளுத்து போட்டுள்ள மீம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 34 திரைப்படம்… கமலின் வாழ்க்கையே மாற்றிய தருணம்.. யார் அந்த ஹிட் கோலிவுட் ஹீரோ?…

ஜெயம் ரவியின் இறைவன் திரைப்படம் கொஞ்சம் நல்லா இருந்தாலும் கூட சந்திரமுகி 2 படத்தை தூக்கி சாப்பிட்டு இருக்கும் என்றும் ஆனால், குடும்பத்துடன் பார்க்க ரசிகர்களுக்கு வேறு ஆப்ஷன் இல்லாத நிலையில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடித்த சந்திரமுகி 2 திரைப்படத்தை ரசிகர்கள் பார்த்து அந்த கொடுமையை அனுபவிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் என கலாய்த்து வருகின்றனர்.

மேலும், ராகவா லாரன்ஸ் வேட்டையனாக உதட்டைக் கடித்துக் கொண்டும் லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டும் கங்கனா ரனாவத்துக்கு மேல மேக்கப் போட்டு வரும் கன்றாவியை எல்லாம் பார்க்க சகிக்கல என தெறித்து ஓடுகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in latest news

To Top