Connect with us

Cinema News

பாக்கியலட்சுமி: செழியனின் திருட்டுத்தனத்தை கண்டுப்பிடித்த பாக்கியா… செம பல்ப் வாங்கிய கோபி..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோடில் பாக்கியா சோகமாக உட்கார்ந்து இருக்க வெளியே சென்ற எழில் வந்து பேசுகிறார். சாப்பிடாமல் இருக்கும் பாக்கியாவை சாப்பிட வைக்கிறார். அதே நேரத்தில் கணேஷின் பெற்றோர் சோகத்தில் இருக்கின்றனர்.

அம்ருதாவிடமும் சொல்ல முடியாது. கணேஷும் உடைந்திட கூடாது எனப் பேசிக்கொள்கின்றனர். கடைசியில் இந்த விஷயத்தினை எழிலிடம் சொல்லும் முடிவிற்கு செல்கின்றனர். அவன் புரிஞ்சிப்பான் என கணேஷ் அப்பா கூறுகிறார்.

பாக்கியா செழியன் வீட்டுக்கு வராமல் போக அவருக்கு கால் செய்கிறார். மாலினியுடன் இருக்கும் செழியனை அவரை அனுப்பி விட்டு அம்மாவிடம் ஆபிஸில் இருப்பதாக பொய் கூறுகிறார். அந்த நேரத்தில் மாலினி பேசிவிட பாக்கியா தப்பாக இருப்பதை உணர்கிறார்.

இதையும் படிங்க: வாய்க்கொழுப்பால் புடுங்கப்பட்ட பீஸ்!.. கெட்டதுலயும் ஒரு நல்லது நடத்துருக்காம்.. இவரும் பிக் பாஸுக்கு போறாரா?..

நீ இப்போவே வீட்டுக்கு வரணும் என கறாராக சொல்லி விட்டு வைக்கிறார். வீட்டுக்கு வந்த செழியன் ஏன்மா இப்படி பண்ணுற எனக் கேட்கிறார். எனக்கு உன்னை பத்தி நல்லா தெரியும். எங்க போன எனக் கேட்கிறார். ஃப்ரெண்ட்டு வீட்டுக்கு என பதில் கூறுகிறார்.

இப்டி என்னை கேள்வி கேட்ட நீ அப்பாவை கேட்காம விட்டதால தான் அவர் தொடர்பு வச்சிக்கிட்டாரு என்கிறார். தப்புதான். அவர கேட்கல. ஆனா என் மருமகளுக்கு அந்த நிலைமை வரக்கூடாதுனு தான் உன்னை கேட்குறேன் எனக் கூறுகிறார். உன்னை நம்பி ஒரு பொண்ணு வந்து இருக்கா உனக்கு ஒரு குழந்தையும் பிறக்கப் போகுது என அறிவுரை வழங்குகிறார்.

இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: விஜயாவை கழுவி ஊற்றிய அண்ணாமலை நண்பர்… முத்துவிடம் சிக்கிய மனோஜ்…

Continue Reading

More in Cinema News

To Top