Connect with us
tamannah

Cinema News

கவர்ச்சி காட்டி காசு பார்த்த 5 நடிகைகள்!.. சத்தமே இல்லாம சாதிச்சி காட்டிய சமந்தா…

Tamil cinema actress : சினிமா உலகை பொறுத்தவரை 1960களில் இருந்து 2000 வரையும் கூட கவர்ச்சி நடனம் ஆடுவதற்கென்றே தனியாக நடிகைகள் இருந்தார்கள். படத்தில் வரும் ஒரு கவர்ச்சி பாடலுக்கு வந்து நடனாடிவிட்டு சென்றுவிடுவார்கள். படத்தின் கதாநாயகிகளுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. சிலுக்கு, அனுராதா, ஜெயமாலினி என பலரும் அப்படி நடித்தார்கள்.

ஆனால், ஒரு கட்டத்தில் கதாநாயகிகளே கவர்ச்சியாக நடனமாட துவங்கினார்கள். எனவே, கவர்ச்சி நடிகைகளுக்கு வேலை இல்லாமல் போனது. அதேபோல், ஒருபக்கம் மார்க்கெட் இழந்த நடிகைகளும் கவர்ச்சி பாடலில் நடனமாடி மீண்டும் பிரபலமாகி படங்களில் ஒரு ஒரு ரவுண்டு வந்துள்ளனர். அப்படி நடித்த 5 நடிகைகள் பற்றித்தான் இங்கே பார்க்க போகிறோம்.

இதையும் படிங்க: வடிவேலு அப்பவே அப்படிப்பட்ட ஆளு! என்னங்கடா இது? பல திடுக்கிடும் தகவலை பகிர்ந்த ஹீரோயின்

80களில் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் ரம்யா கிருஷ்ணன். பல படங்களில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்தார். 90களில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்தது. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். 2000-த்தில் வாய்ப்புகளே இல்லை. எனவே, கவர்ச்சிக்கு தாவினார். சிம்பு நடித்த குத்து படத்தில் வந்த ‘போட்டுத்தாக்கு’ பாடலுக்கு கெட்ட ஆட்டம் போட்டார். அதேபோல், சூர்யா நடித்த காக்க படத்திலும் ‘தூது வருமா’ பாடலிலும் கவர்ச்சி நடனம் ஆடினார். அதன்பின் திரைப்படங்களில் நடிக்க துவங்கி இப்போது பாகுபலி படத்தில் நடிக்கும் அளவுக்கு குணச்சித்திர நடிகையாக மாறிவிட்டார்.

அதேபோல் தான் நடிக்கும் படங்களில் இடுப்பை ஆட்டி நடனமாடி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சிம்ரன். இவருக்கும் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். ஆனால், விஜயுடன் இணைந்து இவர் ஆடிய ‘ஆள்தோட்ட பூபதி நானடா’ பாடலை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

இதையும் படிங்க: ஒரு நிமிஷ விளம்பரத்துக்கு இத்தனை கோடியா?.. ஓவர் ஆட்டம்போடும் நயன்தாரா!. வயித்தெரிச்சலில் சக நடிகைகள்!..

நயன்தாராவுக்கு சரியான வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் விஜய் நடித்த சிவகாசி படத்தில் வரும் ‘கோடம்பாக்கம் ஏரியா’ பாடலில் வந்து செம குத்து போட்டார். அதன்பின் அவருக்கு சில பட வாய்ப்புகள் வந்து டேக் ஆப் ஆனார். அதேபோல், பல வருடங்களாக நடித்து வந்த தமன்னாவுக்கு தமிழில் பெரிய ஹிட் கிடைக்கவில்லை. ஆனால், ஜெயிலர் படத்தில் காவாலா பாடலுக்கு அவர் ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.

அதேபோல், ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாடும் இடத்தில் சமந்தாவும் இருக்கிறார். புஷ்பா படத்தில் அவர் ஆடிய ‘ஊ சொல்றியா மாமா ஊ ஊ சொல்றியா மாமா’ பாடல் பேன் இண்டியா அளவில் பிரபலமானது. இதைத்தொடர்ந்து அவருக்கு பல படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது.

இதையும் படிங்க: என் சம்பளத்தை குறைச்சிக்கோங்க.. நாகேஷுக்கு வாய்ப்பு கொடுங்க… தமிழ் சினிமாவில் இப்படியும் ஒரு நடிகரா?

google news
Continue Reading

More in Cinema News

To Top