‘இறைவன்’ படத்தில் யுவன் செஞ்ச வேலை! ‘தளபதி68’க்கே ஆப்பா அமைஞ்சிடும் போலயே!..

Published on: September 30, 2023
vijay
---Advertisement---

Thalapathy68:  விஜயின் நடிப்பில் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக இருக்கிறது. படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று நடப்பதாக இருந்து பின் ரத்து செய்யப்பட்டது. லியோ படத்தை பற்றியும் விஜயை பற்றியும் நாளுக்கு நாள் வரும் செய்தி படத்தின் ஹைப்பை அதிகரிக்கத்தான் செய்கின்றது.

லியோ படத்திற்கு பிறகு விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபுவுடன் இணைந்து தன் 68வது படத்தில் இணைகிறார். இந்தப் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே இருந்து வருகிறது.

இதையும் படிங்க: இளசுகளே ரெடியா இருந்துக்கோங்க! சூர்யா படத்தில் இணையும் எக்ஸ்பிரஷன் குயின்! ஜோடி பொருத்தம் சூப்பர்

சமீபகாலமாக விஜயின் படங்களுக்கு அனிருத்தான் இசையமைத்து வருகிறார். ஆனால் தளபதி68 படத்தில் யுவன் சங்கர் ராஜாதான் இசையமைக்கப் போகிறார். ஒரு பக்கம் வெங்கட் பிரபுவின் உறவினர். அதோடு பெரும்பாலான வெங்கட் பிரபுவின் படங்களுக்கு யுவன்தான் இசையமைத்து வருகிறார்.

ஆனால் இப்போது யுவனாலும் விஜய் படத்திற்கு பிரச்சினை வந்துவிடுமோ என்ற பயம் வந்து விட்டது. காரணம் இரண்டு தினங்களுக்கு முன் ரிலீஸான இறைவன் படத்திற்கு யுவன்தான் இசையமைப்பாளர்.

இதையும் படிங்க: தலைய காட்டுனாலே 8 கோடி! கோலிவுட்டின் சொகுசு நடிகையாக வலம் வரும் நயன்தாரா..

ஆனால் இந்தப் படம் ஒரு வருடம் முன்பே ரிலீஸாக வேண்டியதாம். ஒரு வருடம் தாமதமானதற்கு காரணமே யுவன்தானாம். ஏனெனில் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ரீ ரிக்கார்டிங் முடிப்பதில் யுவன் தாமதப்படுத்தி விட்டாராம். அதனால் ஒரு பக்கம் கடனை வாங்கி படத்தை முடித்த தயாரிப்பாளருக்குத்தான் பெரும் கஷ்டம்.

அப்பவே படத்தை ரிலீஸ் செய்திருந்தால் குறைந்தபட்சம் வட்டியாவது அந்த தயாரிப்பாளருக்கு குறைந்திருக்கும் என்று சொல்கிறார்கள். இப்படி இருக்கும் யுவனை வைத்தா வெங்கட் பிரபு விஜய் படத்தை எடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இதையும் படிங்க: கவர்ச்சி காட்டி காசு பார்த்த 5 நடிகைகள்!.. சத்தமே இல்லாம சாதிச்சி காட்டிய சமந்தா…

இருந்தாலும் யுவன் தன்னுடைய உறவினர் என்பதால் எப்படியாவது அடிச்சு புடிச்சு பாடலையும் பின்னனி இசையையும் வெங்கட் பிரபு சீக்கிரமாகவே வாங்கி விடுவார் என்று சொல்கிறார்கள்.ஆனாலும் இறைவன் படத்தில் அமைந்த அந்த இசை முன்பு இருந்த யுவனை காணாமல் செய்து விட்டது என்றுதான் சொல்கிறார்கள்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.