Connect with us

Bigg Boss

யாருப்பா ஓல்டு…அவரு தான் கோல்டு…! பிக்பாஸ் சீசன் 7ல் அதிகம் சம்பளம் பவா செல்லத்துரைக்கு தான்!

Biggboss Tamil7: பிக்பாஸ் தமிழ் 7வது சீசன் வெற்றிகரமாக தொடங்கிவிட்டது. பல நாட்களாக ரசிகர்கள் செம வெயிட்டிங்கில் இருந்தது என்னவோ பிக்பாஸுக்கு தான். அடுத்த மூணு மாசத்துக்கு வேறு எண்டெர்டெயின்மெண்ட்டே தேவை இருக்காது. இதனால் பலரும் கடந்து இரண்டு நாட்களாக தொடர்ந்து லைவினை கவனித்து வருகின்றனர்.

இந்த ஏழாவது சீசனில் விசித்ரா, யுகேந்திரன், நிக்சன், விஜய் வர்மா, பூர்ணிமா, அனன்யா, ஐசு, ஜோவிகா, கூல் சுரேஷ், மணிசந்திரா, ப்ரதீப் ஆண்டனி, ரவீனா, வினுஷா, பவா செல்லத்துரை, மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், அக்‌ஷயா என பல துறைகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: யார் யாரையோ கொண்டாடும் போது இவர விடலாமா? சேலஞ்சான கேரக்டரை ஏற்று நடித்த அஞ்சலியின் டாப் 5 படங்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க கமலுக்கு 100 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதைப்போல, கலந்து கொண்டு இருக்கும் போட்டியாளர்களில் யாருக்கு என்ன சம்பளம் என்ற தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. 

இதில் அதிக சம்பளம் வாங்கி முதலிடத்தில் இருப்பவர் எழுத்தாளரும், கதை சொல்லியுமான பவா செல்லத்துரை. இவருக்கு ஒரு நாளைக்கு 28 ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். முதலில் வயது காரணமாக இவர்தான் முதல் எலிமினேட் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இவருக்கு வாக்குகள் குவிந்து வருகிறது.

முன்னாள் கனவுக்கன்னி நடிகையான விசித்திராவுக்கு ஒருநாளைக்கு 27 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டு வருகிறதாம். கொஞ்ச நாளைக்கு நின்று ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில், சக போட்டியாளர் மீது இவர் அடித்த கமெண்ட் தற்போது சர்ச்சையாகி இருக்கிறது. மலேசியா வாசுதேவன் மகன் யுகேந்திரனுக்கும் 27 ஆயிரம் ஒரு நாளைக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது.

சீரியல் நடிகரான விஷ்ணுவுக்கு ஒருநாளைக்கு 25 ஆயிரம் ரூபாய், பிரதீப் ஆண்டனிக்கு 20 ஆயிரம் ரூபாய், கண்ணம்மா புகழ் வினுஷாவுக்கு ஒருநாளைக்கு 20 ஆயிரம் கொடுக்கப்பட்டுள்ளதாம். சீரியல் நடிகை ரவீனா, டான்ஸ் மாஸ்டர் மணிசந்திரா, கூல் சுரேஷ், விக்ரம் புகழ் மாயா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவண விக்ரம் ஆகியோருக்கு ஒருநாளைக்கு 18 ஆயிரம் கொடுக்கப்படுகிறதாம்.

இதையும் படிங்க: கமலுக்கு கிடைத்த வாய்ப்பு சிவாஜிக்கு இல்லையே… அதனால் தான் இந்த படத்துக்கு இத்தனை லேட்டா?

டான்ஸ் மாஸ்டர் விஜய் வர்மா, சினிமா நடிகை அக்‌ஷயா, அமீர் தங்கை ஆயிஷா, யூட்யூபர் பூர்ணிமா ஆகியோருக்கு 15 ஆயிரம் சம்பளம் ஒருநாளைக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. ராப் சிங்கர் நிக்சனுக்கும், வனிதாவின் மகள் ஜோவிகாவுக்கு ஒருநாளைக்கு 13 ஆயிரம், டிஜிட்டல் பிரபலம் அனன்யாவுக்கு 12 ஆயிரமும் ஒருநாளைக்கு சம்பளமாக கொடுக்கப்பட்டு வருகிறதாம். இது பெரும்பாலும் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Bigg Boss

To Top