தசாவதாரம் ‘பல்ராம் நாயுடு’ கேரக்டரை கமல் எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!. அட ஆச்சர்யமா இருக்கே!…

Published on: October 4, 2023
kamal
---Advertisement---

kamalhaasan: காதல் மன்னனாக தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கி உலக நாயகனாக மாறியிருப்பவர் நடிகர் கமல்ஹாசன். ஐந்து வயது முதலே இவர் சினிமாவில் நடித்து வருகிறார். சினிமாவில் 55 வருடங்களுக்கும் மேல் நடித்து வரும் நடிகர் இவர். இப்போதுள்ள நடிகர்களில் அதிக வருடங்கள் நடித்து வரும் நடிகர் இவர்தான்.

வெறும் காதல் படங்களில் நடிக்காமல் பல வித்தியாசமான கதைகளில் பரிசோதனை முயற்சிகளை செய்து பார்த்தவர் கமல்ஹாசன் மட்டுமே. அதனால்தான் ராஜ பார்வை, பேசும் படம். அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன் காமராஜன், நாயகன், குணா, மகாநதி, தேவர் மகன், ஹேராம், தசாவதாரம் போன்ற படங்கள் வெளிவந்தன.

இதையும் படிங்க: கமல் கூட நடிச்சாலே பிரச்னை தான் போல..! பிக்பாஸில் எண்ட்ரி கொடுத்திருக்கும் மாயா மீது மி டூ புகார்!

மேலும், விக்ரம் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்து களத்தில் நானும் இருக்கேன் என இப்போதுள்ள நடிகர்களுக்கும் காட்டியுள்ளார். மேலும், அடுத்து ஹெச்.வினோத்துடன் ஒரு படம், மணிரத்தினத்துடன் ஒரு படம் என பிஸியாகிவிட்டார். கமல் பல வேடங்களிலும் நடித்து 2008ம் வருடம் வெளியான திரைப்படம் தசாவதாரம்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இந்த படத்தில் கமலின் எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கும். முக்கியமாக இந்த படத்தில் கமல் ஏற்ற பல்ராம் நாயுடு வேடம் ரசிகர்களை சிரிக்கவும், ரசிக்கவும் வைத்தது. தெலுங்கு கலந்த தமிழில் பேசி கமல் இந்த வேடத்தில் அசத்தியிருப்பார். இந்த வேடத்தை தனியாக எடுத்து ‘சபாஷ் நாயுடு’ என்கிற படத்தையும் கமல் உருவாக்கி நடித்தார். ஆனால், சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்து அதை டிராப் செய்துவிட்டார்.

இதையும் படிங்க: லியோ படத்தில் களமிறங்கிய கமல்!.. தரமான சம்பவம் செய்த லோகேஷ்!.. அப்ப LCU கன்பார்ம்….

இந்த பல்ராம் நாயுடு என்கிற கதாபாத்திரத்தை கமல் யாரிடமிருந்து உருவாக்கினார் என தெரிந்துகொள்வோம். தமிழ் சினிமாவில் இந்தியன் உட்பட பல பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்தார் ஏ.எம்.ரத்தினம். இவர் ஆந்திராவை சேர்ந்தவர். இவர் பேசும் ஸ்டைலை வைத்துதான் கமல் அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

ஏ.எம்.ரத்தினம் தயாரித்த முதல் தமிழ் படமே இந்தியன் படம்தான். இவர் நடிகை விஜயசாந்தியிடம் மேக்கப் மேனாக பல வருடங்கள் வேலை செய்தவர். விஜயசாந்தியை வைத்து வைஜெயந்தி ஐபிஎஸ் என்கிற படத்தை தயாரித்து கோடிக்கணக்கில் லாபம் பார்த்தவர். இவரின் மகன் ரவிதான் செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலணி படத்தில் ஹீரோவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய்க்கு நோ!. ரஜினி படம்னா ஓகே!. கமல் – சூர்யா முடிவுக்கு பின்னால் இருக்கும் பஞ்சாயத்து இதுதான்!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.