அது ஸ்லிம் பாடி! இது வெயிட் பாடி! ‘தளபதி 68’ல் விழிபிதுங்கி நிற்கும் படக்குழு – கொஞ்சம் குறைங்க பாஸ்

Published on: October 5, 2023
pra
---Advertisement---

Thalapathy 68: விஜயின் நடிப்பில்  தளபதி 68 படத்திற்கான சூட்டிங் ஆரம்பமானது. அதற்கான பூஜைகளும் போடப்பட்டு  குறிப்பிட்ட பிரபலங்கள் மட்டுமே அந்த பூஜையில் கலந்து கொண்டனர். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் லியோ படம் வெளியாகும் வரை தளபதி 68 படத்தை பற்றிய எந்தவொரு அப்டேட்டும் வெளியில் போகக் கூடாது என வெங்கட் பிரபுவுக்கு ஒரு ஸ்டிரிட்டான கண்டீசனையும் விஜய் போட்டுள்ளார்.

இதையும் படிங்க: நீங்க இருக்கது பிக்பாஸ்… கொஞ்சம் யோசிச்சு பேசுங்க பாஸ்..! பிரதீப் பெற்றோர் மரணத்தை கொச்சைப்படுத்திய விஜய் வர்மா…

ஆனால் அதையும் தாண்டி தளபதி 68 படத்திற்கான அப்டேட் வந்து கொண்டுதான் இருக்கின்றது.மேலும் இந்தப் படம் குடும்ப பின்னனியில் நகைச்சுவை கலந்த படமாக வரவிருக்கிறது என்றும் சில தகவல்கள் வெளியானது.

அதற்கேற்றாற்போல இந்தப் படத்தில் பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல், மாதவன் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடிப்பதால் ஒரு வேளை இது செண்டிமெண்ட் கலந்த படமாகத்தான் இருக்கும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: அஜித்தை பற்றி த்ரிஷா சொன்ன ஷாக்கான நியூஸ்! – களைகட்டப் போகும் ‘விடாமுயற்சி’

இந்த நிலையில் நேற்று ஒரு பாடல் காட்சியோடுதான் படப்பிடிப்பை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் டூயட் பாடல் இல்லையாம். அந்த பாடல் காட்சியில் பிரசாந்த் , அஜ்மல் மற்றும் பிரபுதேவா ஆகியோர் கலந்து கொண்டதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதால் ஒரு விஜய் 25 வயது  மதிக்கத்தக்க கேரக்டராம். அதற்காகத்தான் அமெரிக்கா சென்று  புதிய தொழில் நுட்பத்தில் பாடி ஸ்கேனிங் எல்லாம் செய்து வந்தாராம். அதற்காக மட்டும் 20 கோடி செலவானதாம்.

இதையும் படிங்க: கலைஞரின் வசனத்தில் நடிக்க மறுத்த ரஜினி!.. காரணத்த கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!..

விஜய்க்கு மட்டுமில்லாமல் பிரசாந்தும் உடல் எடையை குறைத்திருக்கிறாராம். எந்தளவுக்கு ஸ்லிம்மாக பெண் ரசிகைகளை கவர்ந்து வந்தாரோ அந்த பிரசாந்தா இது? என்று கேட்கும் அளவுக்கு அவரின் உடல் எடை சமீபகாலமாக அதிகரித்து வந்தது.அதனால் எப்படியாவது வெயிட்டை குறைக்கச் சொல்லி கேட்டிருக்கிறார்களாம்.

ஏனெனில் ஒரு வேளை ஆரம்பகால நண்பர்கள் மாதிரி படத்தில் காட்டப்பட்டால் பிரசாந்த் மட்டும் வயது மூத்தவராக தெரிவார் என்பதற்காக சொல்லியிருக்கிறார்கள். இல்லையென்றால் விஜய்க்கு 20 கோடி செலவழித்த மாதிரி பிரசாந்துக்கும் அந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஒரு 2 கோடி செலவழிக்க மாட்டீர்களா? என்று கோடம்பாக்கத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.

 

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.