Cinema History
முதல் சீன்லயே சிவாஜி என்ன கண்டுபிடிச்சிட்டார்!.. பல வருடங்களுக்கு பின் பார்த்திபன் சொன்ன சீக்ரெட்…
Actor parthiban: பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக வேலை செய்து சினிமாவை கற்றுக்கொண்டவர் ஆர்.பார்த்திபன். பாக்கியராஜ் இயக்கி தாவணி கனவுகள் உள்ளிட்ட சில படங்களில் இவர் சின்ன சின்ன வேடங்களில் நடித்தும் இருக்கிறார். ஆனால், பாக்கியராஜிடம் சேர்வதற்கு முன் ஹீரோவாக ஆசைப்பட்டு பல முயற்சிகளும் செய்துள்ளார்.
80களில் சில நாடக கம்பெனிகள் நடத்திய சில நாடகங்களிலும் பார்த்திபன் நடித்திருக்கிறார். ஆனால், நடிப்பில் ஸ்கோர் செய்ய முடியாது என தெரிந்த பின்னரே இயக்கம் கற்றுக்கொள்வதற்காக பாக்கியராஜிடம் சேர்ந்திருக்கிறார். புதிய பாதை படம் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும் மாறினார்.
இதையும் படிங்க: அந்த ஒரு காட்சி! ரியாலிட்டியை வெளிப்படுத்த இப்படியெல்லாம் பண்ணாரா? சிவாஜி பகிர்ந்த ரகசியம்
முதல் படமே அவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. அது கொடுத்த உற்சாகத்தில் பல திரைப்படங்களையும் இயக்கினார். வழக்கமான சினிமா பாதையிலிருந்து விலகி வித்தியாசமாக எதையாவது யோசித்து அதிலும் சொந்தகாசை போட்டு பரிசோதனை முயற்சியை செய்து பார்ப்பது பார்த்திபனின் வழக்கம்.
சுகமான சுமைகள், குடைக்குள் மழை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒத்த செருப்பு, இரவின் நிழல் ஆகிய படங்களே அதற்கு சாட்சி. இவர் முதன் முதலில் சினிமாவில் நடித்தது அவரின் குருநாதர் பாக்கியராஜ் இயக்கிய தாவணி கனவுகள் படத்தில்தான். இந்த படம் 1984ம் வருடம் வெளிவந்தது.
இதையும் படிங்க: தன் தாயின் முன் சிவாஜிக்கு கிடைத்த உயரிய விருது! பரிசுகளோ பணமோ இல்ல – அங்கதான் நிக்காரு நடிகர்திலகம்
இந்த படம் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய பார்த்திபன் ‘அந்த படத்தில் நான் முடித்த முதல் காட்சியே சிவாஜி சாருடன்தான். பெரிய வசனம் அது. சிவாஜி சார் வாயில் ரத்த வாந்தியெல்லாம் எடுக்கும் காட்சி. எனவே, காட்சி எடுப்பதற்கு முன் சிவாஜி சார் என்னிடம் ‘நீ வசனத்தை சரியாக பேசி நடிக்காவிட்டால் நான் திரும்ப ரத்த வாந்தி எடுக்கணும்.. இப்ப போட்டுருக்க டிரெஸ்ஸ காய வச்சி மறுபடியும் இந்த காட்சியை எடுக்க 3 மணி நேரம் ஆகும். உன் டைரக்டருதான் இதுக்கு தயாரிப்பாளர் பாத்துக்க’ என்றார்.
அந்த காட்சியில் நான் ஒரே டேக்கில் சரியாக நடித்துவிட்டேன். காட்சி முடிந்ததும் என்னை பார்த்து சிவாஜி சார் ‘நாடக அனுபவமா?’ எனகேட்டார். ஆமாம் சார் என தலையாட்டினேன். ‘அதான பார்த்தேன் அப்படி இல்லனா இந்த காட்சியை உன்னாலே ஒரே டேக்ல பேசி நடிச்சிருக்க முடியாது’ என சொன்னார். அதுவே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக நினைக்கிறேன்’ என பார்த்திபன் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: சிவாஜி படத்த பார்க்க மாட்டேன்… என் மேல நம்பிக்கை இருந்தா குடுங்க… ஓபனா சொன்ன நடிகர்…