Cinema News
பார்ட் 2-ன்னு சொல்லி பங்கம் பண்ணிய படங்கள்! வேட்டையனை பாலையாவாக மாற்றிய சந்திரமுகி 2வை மறக்க முடியுமா?..
Part 2 Movies: பொதுவாக கதைகள் இல்லாத போது இயக்குனர்களின் தேர்வாக இருப்பது ஏற்கனவே எடுத்தப் படங்களின் கதையை இரண்டாம் பாகமாக எடுப்பதுதான். அதில் ஒரு சில படங்கள் வெற்றிகளையும் குவித்திருக்கிறது. ஒரு சில படங்கள் ஏன்டா முதல் பாகத்திற்கான மரியாதையையே கெடுத்திட்டீங்களே என்று சொல்லும் அளவுக்கு படு தோல்வியும் அடைந்திருக்கின்றன. அந்த வகையில் முதல் பாகத்தை கொண்டாடி இரண்டாம் பாகத்தை கழுவி கழுவி ஊத்தின படங்களைத்தான் பார்க்கப் போகிறோம்.
இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: செழியனுக்கு ஜெனியால் வந்த சிக்கல்… பாக்கியாவிற்கு எதிராக கோபியின் குரூர புத்தி..!
சாமி 2: 2003 ஆம் ஆண்டு ஹரியின் இயக்கத்தில் வெளிவந்த சாமி திரைப்படம். இந்தப் படத்தில் விக்ரம், த்ரிஷா, விவேக் போன்ற பல நடிகர்கள் நடித்திருந்தனர். படத்தில் ஒரு முரட்டுத்தனமான போலீஸ் அதிகாரியாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார் விக்ரம். சொல்லப்போனால் இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. பாடல்கள் அனைத்தும் செம ஹிட். படம் வெளியாகி தாறுமாறு ஹிட் அடித்தது. ஆனால் இதை அப்படியே நிறுத்தியிருக்கலாம். மீண்டும் இரண்டாம் பாகத்தை 2018 ஆம் ஆண்டு ஹரி இயக்கினார் . எந்தளவுக்கு முதல் பாகத்தை கொண்டாடினார்களோ அதே அளவுக்கு வெறுப்பை சம்பாதித்தது இந்த சாமி 2.
பில்லா 2: ஏற்கனவே இருந்த ரஜினி படத்தை ரீமேக் செய்து பில்லா என்ற அதே பெயரில் அஜித் நடித்தார். ரஜினியின் அந்த கிரேஸ் பில்லா படத்தில் அஜித்திடமும் தெரிந்தது. அதனாலேயே ரஜினி ரசிகர்கள் உட்பட அனைவரும் அஜித்தை உயரத்தில் வைத்து கொண்டாடினர். அஜித்தை எந்தளவுக்கு ஸ்டைலாக காட்ட வேண்டுமோ காட்டினார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.படம் வெளியாகி அஜித்தின் ‘வரலாறு’ பட சாதனையை முறியடித்தது. அதனால் இந்த படத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமும் வெளிவந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தை சக்ரி என்பவர் இயக்கினார். முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு பில்லா 2க்கு கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.
இதையும் படிங்க: முதல்ல விஜய் திருந்தட்டும்!.. லியோ படம் ஜெயிலர் வசூலை முந்தாது!.. மீண்டும் உரசும் மீசை ராஜேந்திரன்!..
சண்டக்கோழி 2: லிங்குசாமி இயக்கத்தில் விஷால் மற்றும் மீராஜாஸ்மின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம்தான் சண்டக்கோழி. மதுரையில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாக சண்டக்கோழி அமைந்தது. விஷாலின் கெரியரில் ஒரு சிறந்த படமாகவும் சண்டக்கோழி அமைந்தது. ஆனால் இதன் இரண்டாம் பாகம் வெளிவந்து முதல் பாகத்தை மொத்தமாக காலி செய்தது என்றுதான் சொல்ல வேண்டும். மீரா ஜாஸ்மின் அளவுக்கு கீர்த்தியின் நடிப்பு எடுபடவில்லை. ஒரு பக்கம் வரலட்சுமி வில்லியாக அவதரித்தாலும் திரைக்கதையில் சில குழப்பங்கள் இருந்ததால் மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைக்கவில்லை.
சிங்கம் 2: ஹரியின் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் சிங்கம். சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா இந்தப் படத்தில் நடித்திருப்பார். சூர்யாவின் கெரியரில் சூப்பர் டூப்பர் படமாக சிங்கம் படம் அமைந்தது. விறு விறுவென நகரும் கதைக்களம் படம் பார்ப்பவர்களை இருக்கையின் நுனியிலேயே அமர வைக்கும். அந்த அளவுக்கு வேகம் படத்தில் இருந்தது. அதனால்தான் படம் மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் இதன் தொடர்ச்சியாக வெளிவந்த சிங்கம் 2 மற்றும் சிங்கம் 3 என போதும்டா சாமி என கும்பிடு போட வைத்தது. சிங்கம் 2 படமாவது ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளலாம் என்ற நிலையில் தான் இருந்தது. ஆனால் சிங்கம் 3 படம் ரசிகர்களை திருப்திப் படுத்தவில்லை.
இதையும் படிங்க: ஷூட்டிங் ஆரம்பிச்சதே இப்போதான்!..அதுகுள்ள நடிகையை மாத்திட்டீங்களா… விடாமுயற்சியில் நடந்த ஷாக்…
சந்திரமுகி 2: சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஏன் ரஜினி நடிக்க வில்லை என்று இரண்டாம் பாகம் வெளியான பிறகுதான் தெரிகிறது. எந்தளவுக்கு கெடுக்க வேண்டுமோ அதை விட அதிகமாகவே சந்திரமுகி முதல் பாகத்தை கெடுத்து வைத்திருந்தார்கள். வேட்டையானாக லாரன்ஸை காட்டுவேன் என்று சொல்லி தெலுங்கு நடிகர் பாலையாவின் ஆவியை உள்ளே வைத்து விட்டாரா என தெரியவில்லை. தெலுங்கு பட ரேஞ்சுக்கு சண்டைக் காட்சிகளை வைத்து ரசிகர்களை பாடாய்படுத்திவிட்டார் இயக்குனர் வாசு. ஆனால் சரியான மொக்கை வாங்கிய படமாக அமைந்தது சந்திரமுகி 2.