Connect with us
vidamuyarchi

Cinema News

ஷூட்டிங் ஆரம்பிச்சதே இப்போதான்!..அதுகுள்ள நடிகையை மாத்திட்டீங்களா… விடாமுயற்சியில் நடந்த ஷாக்…

Vidamuyarchi Movie: தமிழ் சினிமாவில் தல என அழைக்கப்படுபவர் நடிகர் அஜித்குமார். இவர் அமராவதி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார். பின் வாலி, வில்லன், விஸ்வாசம் என பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.

என்னதான் சினிமாவில் நடித்தாலும் தனது சொந்த வாழ்க்கைக்கும் தனது சொந்த விருப்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் அஜித் குமார். இவர் அவ்வப்போது உலகம் சுற்றும் வாலிபனாய் மாறினாலும் இவருக்கென உள்ள ரசிகர் கூட்டமும் அதிகம். இவர் நடிப்பில் தயாராகி கொண்டிருக்கும் படம்தான் விடாமுயற்சி.

இதையும் வாசிங்க:சம்பளமே முக்காவாசி முழுங்கிட்டா படத்த எப்படி எடுக்க?!.. தலைவர் 170, தளபதி 68-ல் நடப்பது இதுதான்!..

இப்படம் கடந்த மே மாதமே தொடங்கவிருந்த நிலையில் கதை சரியாக தயாராகாமல் இருந்ததால் தள்ளி சென்றது. ஆனால் இதற்கு அஜித் தான் ஷூட்டிங்கிற்கு வரமால் இழுத்து அடிக்கிறார் எனவும் ஒரு பக்கம் பேசப்பட்டது. இது அஜித் ரசிகர்களிடையே  ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இவை அனைத்தையும் தாண்டி தற்போது இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது அசர்பெய்ஜானில் நடைபெற்று வருகின்றது. இப்படத்தினை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார். மேலும் இப்படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இதையும் வாசிங்க:மீண்டும் கில்லி த்ரிஷாவா… அப்படியே இருக்கே… வைரலாகும் லியோ போஸ்டர்..!

இப்படத்தில் திரிஷாவை தவிர மற்றொரு நடிகையும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. பாலிவுட் நடிகையான ஹீமா குரேஷி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது இவர் இந்த படத்தில் நடிக்கவில்லையாம். அவருக்கு பதில் தெலுங்கு சினிமா நடிகையான ரெஜினா கெசேந்த்ரா நடிக்க உள்ளாராம். ஆனால் இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

அஜித் நடிப்பில் தயாராகிவரும் இத்திரைப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பாக்கப்படுகிறது. ஆனால் பட பிடிப்பு தாமதாமானதால் அதனை உறுதியாக சொல்லவும் முடியாது. ஆனால் இப்படம் அஜித் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்து வருகிறது.

இதையும் வாசிங்க:ஒரு தடவ சொன்னா!. வசனத்தை ரஜினி எங்கிருந்து சுட்டார் தெரியுமா?!.. தலைவரு செம ஷார்ப்!…

google news
Continue Reading

More in Cinema News

To Top