Connect with us

Cinema News

மீண்டும் கில்லி த்ரிஷாவா… அப்படியே இருக்கே… வைரலாகும் லியோ போஸ்டர்..!

Leo Poster: லியோ படத்தின் ப்ரோமோஷன் வேளைகளை ஒருவழியாக செவன் ஸ்க்ரீன் ஸ்டியோஸ் ஆரம்பித்து விட்டதாகவே தெரிகிறது. ஒரேநாளில் இரண்டு அப்டேட்கள். அதுவும் ரொம்ப நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அப்டேட் என்றால் விஜய் ரசிகர்களை கையிலா பிடிக்க முடியும்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம் லியோ. இப்படத்தினை அனிருத் இசையமைத்து இருக்கிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டியோஸ் மூலம் லலித் இப்படத்தினை தயாரித்து இருக்கிறார். இப்படத்தில் வில்லன்களாக அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோர் நடிப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிற வைத்து இருக்கிறது.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: செழியனை ப்ளாக்மெயில் செய்து தன் கைப்பிடியில் வைத்த மாலினி…! கோபிக்கு வந்த பெரிய ஆப்பு!

ஆடியோ ரிலீஸுக்கு காத்திருந்த ரசிகர்களுக்கு அதை ரத்து செய்து அதிர்ச்சி கொடுத்தது தயாரிப்பு நிறுவனம். இதனால் கடுப்பில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு பேடாஸ் பாடலை ரிலீஸ் செய்தனர். ஆனால் அதுக்கூட அவர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை தரவில்லை. இதனால் ப்ரோமோஷன் வேலைகளை உடனே தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அக்டோபர் 5ந் தேதி லியோ ட்ரைலரை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர். இன்று மாலை பல இடங்களில் இதை திரையுடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இப்படத்தின் சென்சார் முடிவுகளும் வெளிவந்து விட்டது. மறு சென்சார் அப்ளே செய்து அதன்மூலம் யூ/ஏ சான்றிதழை பெற்று இருக்கின்றனர். இதற்கே சமூக வலைத்தளத்தில் கொண்டாட்டமாகி இருக்கிறது.

இதையும் படிங்க: செல்லாது செல்லாது!. இவரு ஆதி குணசேகரனா?!.. பொங்கும் ரசிகர்கள்!. எதிர் நீச்சலுக்கு வந்த சோதனை!…

செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நல்ல மனநிலையில் இருக்காங்க போல. சில நிமிடங்களுக்கு முன்னர் நடிகை த்ரிஷாவின் லியோ பட கதாபாத்திரத்தின் போஸ்டர் ரிலீஸானது. வெளியான சில நொடிகளில் போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.

இதில் ஒரு ஸ்பெஷலும் இருக்கிறதாம். கில்லி படத்தில் விஜயுடன் இணைந்து நடித்த த்ரிஷாவின் கேரக்டரில் லுக்கில் தான் த்ரிஷா இருக்கிறார். இவருக்கு வயசே ஆகாதா என கமெண்ட்டுகள் பறந்து வருகிறது. பல வருடம் கழித்து த்ரிஷாவும், விஜயும் இணைந்து நடிப்பது பலரிடம் எதிர்பார்ப்பினை உருவாக்கி இருக்கிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top