Connect with us
rama

latest news

செல்லாது செல்லாது!. இவரு ஆதி குணசேகரனா?!.. பொங்கும் ரசிகர்கள்!. எதிர் நீச்சலுக்கு வந்த சோதனை!…

Ethir Neechal Serial: சன் டிவியில் மிகவும் பரபரப்பான சீரியல்களில் ஒன்று ‘எதிர் நீச்சல்’. இந்த சீரியல் கடந்த ஒரு வருடமாக ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. ஜனனி என்ற கதாபாத்திரத்தை மையக் கருத்தாக வைத்து ஆரம்பத்தில் இந்த சீரியல் ஒளிபரப்பானது.

பெண்களை தன் கட்டுக்குள் வைத்து ஆணாதிக்கம் செய்யும் ஒரு குடும்பத்தை எப்படி அந்த ஜனனி காப்பாற்றுகிறாள் என்பது தான் இந்த சீரியலின் மையக்கருத்து.ஆனால் முதலில் ஜனனியையே சுற்றி வந்த கதை மாரிமுத்துவின் ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்திரம் கதையின் போக்கையே மாற்றியது.

இதையும் படிங்க: சேட்டைப்பிடிச்ச லோகி முதல் வெல்கம் பேக் அனுஷ்கா வரை… இந்த வார அக்டோபர் ஓடிடி ரிலீஸ்..!

அந்தளவுக்கு அவரின் நடிப்பு அனைவரையும் மிரள வைத்தது. அதன் மூலமாகவே மாரிமுத்துவுக்கு பல பட வாய்ப்புகள் வந்தது. எதிர்பாராதவிதமாக மாரிமுத்துவின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.இனி ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்திற்கு யார் செட் ஆவார்கள் என ரசிகர்களும் ஆர்வமாகக் காத்துக் கொண்டிருந்தனர்.

ஒரு வழியாக நேற்றைய எபிசோடில் பிரபல எழுத்தாளரும் நடிகருமான வேல. ராமமூர்த்தி ஆதிகுணசேகரான ஒரு மாஸ் எண்ட்ரியைக் கொடுத்தார்.ஆனால் எந்தளவுக்கு ரசிகர்களை கவர்ந்தார் என்பதைதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: செழியனை ப்ளாக்மெயில் செய்து தன் கைப்பிடியில் வைத்த மாலினி…! கோபிக்கு வந்த பெரிய ஆப்பு!

பெரும்பாலான ரசிகர்கள் இன்னும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனர். இன்னும் சிலர் ‘இன்னும் எதிர்பார்க்கிறோம் சார்… மாரிமுத்து சாரப்போல் அல்லாமல்,, உங்கள் ஸ்டைலிலேயே நடிக்க வேண்டுகிறேன்’ என்றும் கூறியிருக்கின்றனர்.

இன்னும் ஒரு சில பேர் ‘ஆரம்பத்தில் அப்படித்தான் இருக்கும். நாடகம் செல்ல செல்ல இவர் நடிப்பு மக்கள் மனதில் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது. நடிப்பு நல்லா இருக்கு. குரல் செட்டாகல. மாரிமுத்து மாதிரி அழுத்தமான குரல் மாத்துனா சூப்பரா இருக்கும்’ என்று தங்கள் கருத்தை சொல்லிவருகின்றனர்.

இதையும் படிங்க: அப்படி பாக்குறதுன்னா வேணாம்!. குட்டி நயன்தாராவை பார்த்து கூல் சுரேஷ் ஆன ரசிகர்கள்!..

ஒருவர் இடத்தை இன்னொருவரால் பூர்த்தி செய்ய இயலாததுதான். ஆனால் வேல ராமமூர்த்தி மாரிமுத்துவின் இடத்தைப் பிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் அவரை விட பயங்கரமா இருக்கும் என்று ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார். பார்ப்போம். எப்படி போகப் போகிறது என்று.

google news
Continue Reading

More in latest news

To Top