அஜித்தின் மாஸ்ஹிட் பாடலை குதறி கொடுத்த யுவன் ஷங்கர் ராஜா… திணறிய இயக்குனர்…

Ajithkumar: கோலிவுட்டின் மாஸ்ஹிட் ஹீரோவான அஜித்தின் சில மாஸ்ஹிட் பாடல்கள் பல வருடம் கழிந்தாலும் அந்த கிரேஸை விடாமல் கொண்டு இருக்கும். அப்படி ஒரு பாடலை இசையமைப்பாளர் செய்த கொடுமையால் படக்குழு திண்டாடிய சுவாரஸ்ய நிகழ்வு குறித்த தகவல்கள்.

நடிகர் அஜித்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். கிட்டத்தட்ட தனக்கென மிகப்பெரிய அடையாளத்தினை கொண்டவர். அவர் நடிப்பில் பெரிய ஹிட் படங்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது. இருந்தும் அவரை ஸ்டைலிஷாக காட்டிய திரைப்படம் என்றால் பில்லா தான்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கொடுத்த எம்.பி. பதவியை ஏற்க மறுத்த நடிகை!.. இதுதான் காரணமா?..

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பில்லாவும் ரீமேக்காக உருவான இப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தினை விஷ்ணுவர்தன் இயக்கி இருந்தார். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்தார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால் படத்தின் முக்கியமான பாடலான மை நேம் ஈஸ் பில்லா பாடல் இழுத்துக்கொண்டே சென்றதாம்.

விஷ்ணுவர்தனும் ஓயாமல் யுவனுக்கு கால் செய்து என்ன ஆனது என்பது குறித்து கேள்வி எழுப்பி கொண்டே இருக்கிறார். யுவனும் வேறு படத்தின் சிக்கலில் சிக்கியதால் நேரத்தை தள்ளிக்கொண்டே சென்றுவிடுகிறார். குறிப்பிட்ட அந்த பாடலின் ஷூட்டிங் நாளும் வந்தது. ஆனால் பாடல் இன்னமும் வந்தபாடு இல்லை. ஷூட்டிங் செய்ய வேண்டும். அதனால் அஜித்தை பாடலுக்கு சில காட்சிகளை விஷ்ணுவர்தன் இயக்கிவிட்டார்.

இதையும் படிங்க: பயோபிக் ட்ரெண்ட் தொடங்கிட்டாங்களோ… ரஜினிகாந்த் எடுத்திருக்கும் திடீர் முடிவு?

டான்ஸ் மாஸ்டர் கல்யாணோ மியூசிக் இல்லாமல் எப்படி டான்ஸ் ஆட வைப்பது என தயங்கியப்படி கேட்டு இருக்கிறார். மீண்டும் யுவனிடம் வம்பு செய்து பிச்சி புடிங்கி எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தாராம். பிட் பாடலாக வந்ததை பார்த்து அஜித் என்ன ஆனது எனக் கேட்க நிலைமை சொல்லி இருக்கிறார் விஷ்ணுவர்தன். அதன்பின்னரே அஜித்தும் பரவாயில்லை என நடித்து முடித்தாராம்.

 

Related Articles

Next Story