ஏலேய் இதெல்லாம் ரொம்ப ஓவரு… இர்பான் யூட்யூப் சேனலுக்கு இத்தனை லகர வருமானமா?
Irfansview: யூட்யூப்பில் பிரபலமான இர்பான் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார். அது ஒருபுறமிருக்க அவரின் யூட்யூப் சம்பளம் குறித்த ஆச்சரிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சினிமா பிரபலங்களை தாண்டி தற்போது யூட்யூப் பிரபலங்கள் தான் பெரிய அளவில் சம்பாரிக்கின்றனர். தமிழ்நாட்டில் சில தெரிந்த முகங்களில் ஒருவராக இருப்பவர் இர்பான். இவர் இர்பான்ஸ் வியூ என்ற சேனலை நடத்தி வருகிறார். புட் விலாக் போட்டு வந்த இர்பான் தற்போது பல விஷயங்களையும் விலாக் போட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கொடுத்த எம்.பி. பதவியை ஏற்க மறுத்த நடிகை!.. இதுதான் காரணமா?..
யூட்யூப்பை தாண்டி தற்போது விஜய் டிவியின் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் ஒரு குக்காக களமிறங்கி இருக்கிறார். இவரிடம் ரசிகர்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இவரின் யூட்யூப் சேனலின் வருமானம் குறித்து ஆச்சரிய தகவல் வெளியாகி இருக்கிறது.
இர்பான்ஸ் வியூ சேனலில் மொத்தமாக 4 மில்லியனுக்கும் அதிமான சப்ஸ்கிரைபர்களை வைத்து இருக்கிறார். அவர் ஒரு மாதத்துக்கு சரியாக 30 வீடியோக்களை போட்டுவிடும் இர்பானுக்கு வியூஸில் குறைவில்லையாம். கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு சம்பளமாக 7 லட்சம் வரை எடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: பயோபிக் ட்ரெண்ட் தொடங்கிட்டாங்களோ… ரஜினிகாந்த் எடுத்திருக்கும் திடீர் முடிவு?