நீங்க செஞ்சது ரொம்ப பெரிய தப்பு!.. லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய பயில்வான்!..

இளையராஜா பாடலை ரஜினிகாந்தின் கூலி படத்துக்கு லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் பயன்படுத்திய நிலையில், தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்க்கு எதிராக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இளையராஜா காப்புரிமை தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற வரும் நிலையில் பாடலுக்கு எப்படி இசையமைப்பாளர் மட்டும் சொந்தம் கொண்டாட முடியும் என்கிற கேள்வியை நீதிபதிகள் எழுப்பி உள்ளனர்.

இதையும் படிங்க: ஒரே ஒரு ரஜினி படம்!.. ஓஹோன்னு வாழ்க்கை!.. நெல்சன் இனிமே வெறும் டைரக்டர் மட்டுமில்லை.. அதுக்கும் மேல!

அந்த வழக்கு ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், இளையராஜா அனுமதி பெறாமல் ரஜினிகாந்தின் கூலி படத்தின் டைட்டில் டீசரில் “ வா வா பக்கம் வா”, “ செண்பகமே செண்பகமே” பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது இளையராஜா தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அது தொடர்பாக சன் பிக்சர்ஸுக்கு எதிராக இளையராஜா நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த பாடலை பயன்படுத்த அனுமதி பெற வேண்டும் என்றும் உரிய அனுமதி பெறவில்லை என்றால் டீசரில் இருந்து பாடலை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: கலைஞர் முன் அஜித் பேசிய ’அந்த’ சம்பவம்… பிரச்னைக்கு காரணமான ஷாலினி… என்ன நடந்தது?

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பயில்வான் ரங்கநாதன் இளையராஜா தரப்பில் தான் நியாயம் உள்ளது என்றும் பெரிய தயாரிப்பு நிறுவனம் காப்புரிமை வைத்திருக்கும் இளையராஜாவுக்கு பணத்தை கொடுத்துவிட்டு அவரது இசையை பயன்படுத்தி இருக்க வேண்டும் அதை விடுத்து விட்டு இஷ்டத்துக்கு எடுத்த பயன்படுத்தினால் காப்புரிமையை வைத்திருப்பவர் கேள்வி எழுப்ப தான் செய்வார். இதில் இளையராஜா மீது எந்த ஒரு தவறும் இல்லை எனப் பேசியுள்ளார்.

வாழ்க்கை கொடுத்த இளையராஜா பற்றி வைரமுத்து வாய் திறக்காமல் இருந்தால் தான் அவருக்கு நல்லது. அதை விடுத்து விட்டு மொழி பெரியதா இசைப் பெரியதாய் என பேசுவது நன்றி கெட்ட செயல் என பயில்வான் ரங்கநாதனும் வைரமுத்துக்கு எதிராகவே கருத்தை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பப்புக்கு லுங்கியோடு வந்த கவுண்டமணி! ‘மேட்டுக்குடி’ பட சூட்டிங்கில் நடந்த காமெடியான சம்பவம்

 

Related Articles

Next Story