ஒரே ஓவர் பில்டப்பா இருக்கு!.. அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 தெறி மாஸா!.. வெறும் தூசா?.. எப்படி இருக்கு?..

புலி புலி புலி புலி.. சிங்கம் சிங்கம் ஹி இஸ் துரை சிங்கம்.. கங்கா கங்கா கங்குவா.. வரிசையில் தேவி ஸ்ரீ பிரசாத் புஷ்பா புஷ்பா புஷ்பா புஷ்பராஜ் என்கிற பாடலை ஃபர்ஸ்ட் சிங்கிளாக போட்டுள்ளார்.

பாடல் முழுக்க வரிகள் கீழ இறங்கியும் இசை மேலோங்கியும் இளையராஜா வைரமுத்து பிரச்சனை போல உள்ளது. பிரம்மாண்ட பொருட்செலவில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகிறது.

இதையும் படிங்க: ஏலேய் இதெல்லாம் ரொம்ப ஓவரு… இர்பான் யூட்யூப் சேனலுக்கு இத்தனை லகர வருமானமா?

புஷ்பா படத்தின் பாடல்கள் அனைத்து ஹிட் அடித்த நிலையில், புஷ்பா 2 படத்திலும் பாடல்களை ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் மண்டைக்குள் ஒலிக்கும் மந்திரம் போல புஷ்பா என்கிற பிராண்டை ரசிகர்களுக்கு செலுத்த வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியுள்ளனர். ஆனால், தேவி ஸ்ரீ பிரசாத் அனைத்து ஹீரோக்களுக்கும் ஒரே மாதிரி பாடல்களைப் போட்டு வருவது போர் அடிக்க ஆரம்பித்து விட்டது என ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

புஷ்பா திரைப்படத்தின் வெற்றிக்கு காரணமாக சாமி சாமி மற்றும் ஊ சொல்றியா மாமா பாடல்கள் இருந்தன. ஸ்ரீவள்ளி பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் இரண்டாம் பாகத்தில் அதிகமாக புஷ்பா நெடி மட்டுமே இருக்க வேண்டும் என்கிற தொனியில் பாடல்கள் உருவாக்கப்பட்டிருப்பது போல தெரிகிறது. புஷ்பா புஷ்பா பாடலில் அந்த டீ கிளாஸை வைத்துக் கொண்டு அல்லு அர்ஜுன் ஆடும் அந்த ஸ்டெப் மட்டும் ஒட்டுமொத்த ரசிகர்களை நிச்சயம் கவரும் என தெரிகிறது. விஷுவலாக அல்லு அர்ஜுன் திரையில் மேஜிக் நிகழ்த்தி விடுவார்.

இதையும் படிங்க: கலைஞர் முன் அஜித் பேசிய ’அந்த’ சம்பவம்… பிரச்னைக்கு காரணமான ஷாலினி… என்ன நடந்தது?

முதல் பாடலே புஷ்பா என வெளியாகி உள்ள நிலையில் மொத்த படத்தையும் அல்லு அர்ஜுன் மட்டுமே தனது தூக்கி நிறுத்தியிருக்கும் ஷோல்டரில் தாங்க போகிறாரா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.

இசையை மறந்து அதனுள் இருக்கும் பாடல் வரிகளை கவனித்தால் எல்லாமே பஞ்ச் டயலாக் வகையறாக்கள் தான். புதிதாக புஷ்பராஜ் பற்றி எந்த ஒரு விஷயமும் அதில் இல்லை. எப்படியும் இந்த பாடல் மிகப்பெரிய வெற்றி பாடலாக மாறிவிடும். ஆனால் படத்திலும் இதே அளவுக்கு ஓவர் டோஸ் பில்டப் இருந்தால் மற்ற மொழிகளில் படம் ஓடுவது கஷ்டம் தான்.

இதையும் படிங்க: சாதனை செய்த கமல்ஹாசன்!. விழாவுக்கு வர மறுத்த பிரபல நடிகர்!.. அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்!…

 

Related Articles

Next Story