இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போகிறார் என்கிற அறிவிப்பு சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான போது ரசிகர்களுக்கு இருந்த சந்தோஷம் தற்போது அயலான் டீசரைப் பார்த்து வந்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
கடந்த சில ஆண்டுகளாக அயலான் படம் கிடப்பில் இருந்த நிலையில், சிவகார்த்திகேயன் தோற்றம், அயலான் படத்தின் கிராபிக்ஸ், கதை, ஏ ஆர் ரகுமானின் இசை, ரகுல் பிரீத் சிங்கின் நடிப்பு அனைத்துமே பழைய படம் பார்ப்பதைப் போன்ற பீலிங்கையே தருகிறது.
கண்டிப்பாக சிவகார்த்திகேயன் அயலான் திரைப்படம் அந்த ஏலியன் மூலமாக குழந்தைகளை வெகுவாக கவரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. சமீபத்தில் சந்திரமுகி 2 படத்திற்கு கூட்டிட்டு போங்க என குழந்தைகள் அடம் பிடித்து பெரியவர்களை அழ வைத்த நிலைதான் அயலான் படத்திலும் ஏற்படும் என்கிற ஐயம் எழத்தான் செய்கிறது.
இன்று நேற்று நாளை படத்தில் டைம் டிராவல் கான்செப்ட்டை வைத்து ஃபீல் குட் மூவியை ரவிக்குமார் இயக்கிய இருந்தார். அயலான் படத்திலும் அவரது இயக்கத்தின் மீது உள்ள நம்பிக்கை தான் ரசிகர்களை தியேட்டருக்கு கொண்டு செல்லும் என தெரிகிறது.
ஆனால், தற்போது வெளியான டீசரில் அந்த கடைசியில் வரும் மல்லிப்பூ வச்சு வச்சு வாடுதே காமெடியை தவிர பெரிதாக எதுவும் கனெக்ட் ஆகவில்லை. நம்ம வீட்டுப் பிள்ளை, ஹீரோ படங்களில் பார்த்த சிவகார்த்திகேயனை மீண்டும் பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுக்கலாம்.
டாக்டர்.. டாக்டர் என சிவகார்த்திகேயனின் அழைத்து வந்த குழந்தைகள் மாவீரன் மாவீரன் என அழைத்து வரும் வேளையில் அயலான் படமும் அவர்களை ஈர்க்கும். ஆனால், பொங்கல் பண்டிகைக்கு ரஜினிகாந்தின் லால் சலாம், அரண்மனை 4, வணங்கான், மேலும், தங்கலான் உள்ளிட்ட பல படங்கள் போட்டிக்கு வந்தால் அயலான் கதி அதோ கதிதான் என தெரிகிறது.
இசை அமைப்பாளர், பின்னணிப்பாடகர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறன் கொண்டவர் ஜி.வி.பிரகாஷ்குமார். இவர் தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு படங்களிலும்...
தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் திரைப்படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. தமிழ்...
ஆர்.ஜே பாலாஜி சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டது குறித்து மனம் திறந்து பேட்டியில் பேசியிருக்கின்றார். தமிழ் சினிமாவில் ஆர்ஜே வாக அறிமுகமாகி பின்னர்...