அடுத்த படத்திற்கு ரெடியான கேஜிஎப் ஹீரோ.. இயக்குனர் யார்னு கேட்டா ஷாக் ஆவீங்க!..

Published on: October 8, 2023
yash
---Advertisement---

Actor yash: கன்னட நடிகர்களில் ஒருவர் யாஷ். கன்னடத்தில் சாதாரண நடிகராக இருந்த யாஷ் கேஜிப் படத்திற்கு பின் பேன் இண்டியா நடிகராக மாறிவிட்டார். கேஜிஎப் முதல் பாகம் வெளியான போது இவர் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார். ஏனெனில், அந்த படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது.

அடுத்து வெளிவந்த கேஜிஎப் 2 திரைப்படம் இமாலய வெற்றி பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் பெரிய வரவேற்பை பெற்று சில நூறு கோடிகளை வசூல் செய்தது. இதுவரைக்கும் எந்த திரைப்படத்திலும் ஒரு ஹீரோவுக்கு இவ்வளவு பில்டப் காட்சிகள் இருந்தது இல்லை.

இதையும் படிங்க: ஜோவிகா என் பொண்ணும் இல்ல.. அவர் பொண்ணும் இல்ல – திடீர் புரளியை கிளப்பி விட்ட வனிதாவின் Ex.கணவர்

ஆனால், அது கொஞ்சமும் போரடிக்காமல், ரசிகர்களை கவரும்படி அப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் திரைக்கதை அமைத்திருந்தார். இந்த 2 பாகத்திலும் யாஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருந்தார். 2ம் பாகத்தின் இறுதியில் அவர் மரணமடைவது போல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. சஞ்சய் தத் வில்லனாக நடித்திருந்தார்.

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்களை கவர்ந்ததால் மூன்றாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் அக்டோபர் மாதமே துவங்கவுள்ளது. முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த பிரசாந்த் நீல் திட்டமிட்டுள்ளார். ஒருபக்கம். அதற்குள் வேறு ஒரு படத்தில் யாஷ் நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க: இந்த அளவுக்கு ஒரு மொக்கை பிக் பாஸ் ஷோவை பார்த்ததே இல்லை!.. கமல்ஹாசன் சரியான பிளேடு போட்டுட்டாரு!..

கமலின் ராஜ்கமலில் தயாரிப்பில் கமல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி மாதவன் நடித்து 2003ம் வருடம் வெளியான திரைப்படம் நளதமயந்தி. இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவர் கீத்து மோகன்தாஸ். இவர் கேரளாவை சேர்ந்தவர். இவர் ஒரு இயக்குனரும் கூட.

மலையாளத்தில் லயர்ஸ் டைஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் பெற்றுள்ளார். இவரின் இயக்கத்தில்தான் யாஷ் நடிக்கவுள்ளார். இதுதான் எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், கேஜிஎப் படம் மூலம் யாஷ் மாஸ் ஹீரோவாக மாறியுள்ளார். அவர் எப்படி கீத்து மோகன்தாஸ் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பது தெரியவில்லை. ஆனாலும், அதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.இந்த படத்தை முடித்துவிட்டு யாஷ் கேஜிஎப் 3 படத்தில் நடிக்கவுள்ளார்.

இதையும் படிங்க: என்னப் போய் இப்படி சொல்லலாமா? சவால் விட்ட விக்ரமால் படப்பிடிப்பில் அழுத லைலா – நடக்குற காரியமா?

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.