Connect with us
laila

Cinema News

என்னப் போய் இப்படி சொல்லலாமா? சவால் விட்ட விக்ரமால் படப்பிடிப்பில் அழுத லைலா – நடக்குற காரியமா?

Vikram: தமிழ் சினிமாவில் அஜித், விஜய் இவர்களுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்தால் நடிகர் விக்ரமிற்கு என்று ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். சீயான் என அன்போடு அழைக்கப்படும் விக்ரம் கமலுக்கு அடுத்தப்படியாக வித வித கெட்டப்களில் நடிக்கக் கூடிய நடிகராக சினிமாவில் வலம் வருகிறார்.

தற்போது விக்ரம் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்து பட ரிலீஸிற்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரும் சூர்யாவும் சேர்ந்து நடித்த பிதாமகன் படத்தை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மகளுடன் இறக்கவில்லை!.. மக்களுக்காக வாழ்கிறேன்!.. அடுத்தடுத்து அதிரடி காட்டும் விஜய் ஆண்டனி!..

பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா போன்ற பல நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படம் தான் பிதாமகன். இந்தப் படத்தில் விக்ரம் ஒரு வெட்டியானாக நடித்திருப்பார். சூர்யா கிட்டத்தட்ட கோமாளித்தனம் பண்ணும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

பிதாமகன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் லைலாவுக்கு விக்ரம் ஒரு சவாலை விடுத்தாராம். அதாவது 20 வினாடிக்குள்  சிரிக்காமல் இருக்க வேண்டும் என லைலாவுக்கு சவால் விட்டிருக்கிறார் விக்ரம்.

இதையும் படிங்க: லியோ படத்தில் வாய்ப்பு வாங்க வையாபுரி பட்ட பாடு!. இதையே ஒரு கதையா எடுக்கலாம்!..

அதற்கு லைலா தயாராக இந்தப் பக்கம் டைமரை ரெடியாக வைத்து நின்றாராம் விக்ரம். சவால் விட்ட மாதிரியே லைலாவால் சிரிக்காமல் இருக்க முடியவில்லையாம். சிரிப்பை அடக்க முயற்சிக்க லைலாவின் கண்களில் இருந்து கண்ணீர் தான் வந்ததாம்.

20வினாடிக்குள் லைலா சிரித்து விட்டாராம். லைலா என்றாலே சிரிப்புதான் முதலில் நியாபகத்திற்கு வரும்.எந்த ஒரு  படத்திலும் லைலா சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருக்க மாட்டார். அப்படி இருப்பவரிடம் இந்த மாதிரியான சவால் எல்லாம் வேலைக்கு ஆகுமா?

இதையும் படிங்க: ஷங்கரை பார்த்து சூடு போட்டுக்கிட்டேன்!.. கமல் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார் பட்ட பாடு!..

google news
Continue Reading

More in Cinema News

To Top