ராஜாவால் மியூசிக் டைரக்டர் ஆனேன்... திட்டினாலும் அவர்தான் என் குரு!.. சொன்னது யார் தெரியுமா?..
இசை ஆசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இசை அமைப்பாளர், இயக்குனர் என பல்வேறு முகங்களைக் கொண்டவர் ஜேம்ஸ்வசந்தன். இவர் சுப்பிரமணியபுரம் படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே கண்கள் இரண்டால் பாட்டை எல்லாம் கேட்கும்போது இந்தப் படத்துக்கு யாரு இசை அமைப்பாளர்னு எல்லாரும் கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. அவ்வளவு டச்சிங்கா இருந்தது அந்தப் பாட்டு. இசை அமைப்பாளர் ஆவதற்கு முன் என்னென்ன அனுபவங்களைக் கண்டார் என பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
இதையும் படிங்க... பெத்த சம்பளமோ?… தனுஷ் நடிக்கும் அடுத்த பட இயக்குனர் இவர் தானாம்… உஷாரு தான் நீங்க…
இளையராஜாவின் இசை தான் என்னைத் திரை உலகிற்கு அழைத்து வந்தது. ஆரம்பத்தில் இசையைக் கற்பதில் ஆர்வமுள்ள மாணவராக இருந்து அதைக் கற்றுக் கொண்டேன். கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகளுக்கு என பியானோ வாசித்தேன். அது ஒரே குட்டையில் ஊறியதைப் போல இருந்தது.
தொடர்ந்து சர்வதேச பள்ளியில் இசை ஆசிரியர் வேலை கிடைத்தது. இசை அமைப்பாளர் ஆகணும் என்ற நோக்கம் பள்ளி நாள்களிலேயே இருந்தது. சென்னைக்கு வந்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆனேன். அப்போது எனக்கு என இசைக்கருவிகள் வாங்க என்னிடம் பணம் இல்லை. அதனால் இசை அமைப்பாளராக கொஞ்சம் தாமதம் ஆனது.
இளையராஜா தான் என் மனதில் இசை அமைப்பாளராக விதை போட்டார். அவர் தான் எனக்கு இசை பல்கலைக்கழகம். எங்கெங்கு இருந்து எந்த மாதிரியான இசையைப் பாடல்களுக்குள் கொண்டு வந்தார்? இந்திய இசை விநோதமான வடிவம். உலகில் எங்குமே இல்லாதது. எங்கு கேட்டாலும் அதில் இந்திய இசை தெரியும். இளையராஜா இசையில் பைத்தியமாக இருந்தேன்.
அப்போது நான் பள்ளி சிறுவன். திருச்சி நகராட்சியில் சின்ன மைதானம் உள்ளது. அன்னக்கிளி படத்தின் 175வது நாள் இந்த மைதானத்தில் நடப்பதாக போஸ்டர் ஒட்டி இருந்தார்கள். மேடையின் ஒரு மூலையில் எங்க வீடு. இளையராஜா வரப் போகிறார் என்பதால் எனக்கு அன்று முதலே ஆர்வம். தினமும் பள்ளி முடிந்ததும் அங்கு சென்றுவிடுவேன்.
அதனால் அங்கு கொட்டகை போட ஆரம்பித்தனர். பந்தக்கால் தோண்டிய நாள் முதல் அந்த நிகழ்ச்சியில் முதல் பாடல் வணக்கம் பலமுறை சொன்னேன் பாடும் வரை எனக்கு இருந்த உணர்வுகளை இன்றும் என்னால் மறக்கவே முடியாது. நிகழ்ச்சிக்கு என்னால் டிக்கெட் வாங்கி உள்ளே போக முடியாது.
இதையும் படிங்க... அஜித்துக்கு காலின் பாதத்தில் உணர்வே கிடையாது!.. சுந்தர் சி சொன்ன ஷாக்கிங் தகவல்…
அதனால மேடைக்குப் பின்னால இருந்து கேட்கிறேன். பேஸ் கிட்டார், லோ சவுண்ட் எல்லாம் அங்கு நல்லா கேட்கும். நான் அன்னக்கிளி பாடலைத் தான் முதலில் பாடுவார்கள் என நினைத்தேன். ஆனால் எம்எஸ்.வி.யின் வணக்கம் முதல் முறை சொன்னேன் என டிஎம்எஸ்.சும், சுசீலாவும் பாடுகிறார்கள். ஏன்னா அவரோட முதல் படம் அது.
எனக்கு அப்போது புல்லரிப்பு. அதுதான் எனக்குத் தொடக்கப் பயணம். தொழில்முறை இசை அமைப்பாளர் ஆகணும்னு நான் தொடங்கிய பயணம் அங்கு தான் ஆரம்பித்தது. அதன்பிறகு இளையராஜா அதிகமாக பொது நிகழ்ச்சி நடத்தவே இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதே ஜேம்ஸ் வசந்துதான் ராஜாவை சில விஷயங்களில் கடுமையாக விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.