Ramya krishnan: தமிழ், தெலுங்கில் 40 வருடங்கள் மேல் நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். கவுண்டமணிக்கு கூட இவர் ஜோடியாக நடித்துள்ளார். துவக்கத்தில் கிடைக்கும் வேடங்களில் நடித்த ரம்யா ஒருகட்டத்தில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். தமிழில் பெரிதாக வாய்ப்பு இல்லை என்றாலும் தெலுங்கில் சிரஞ்சீவி, நாகார்ஜூன் போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார்.
இப்போது தமிழ், தெலுங்கு என இரண்டிலும் குணச்சித்திர நடிகையாக வலம் வருகிறார். ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி மற்றும் பாகுபலி2 படங்களில் சிவகாமி கதாபாத்திரத்தில் ராஜமாதாவாக அசத்தலான நடிப்பை கொடுத்து ரசிக்க வைத்தார். இந்த படம் மூலம் பேன் இண்டியா அளவில் பிரபலமானார்.
இதையும் படிங்க: ‘விக்ரம்’ படத்துல மிஸ் ஆனத இந்த படத்துல புடிச்சுட்டேன்! லியோ படம் பற்றிய சீக்ரெட்டை பகிர்ந்த லோகேஷ்
ஒருபக்கம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராக கலக்கி வருகிறார். பல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தவர் இவர். தெலுங்கு பட இயக்குனர் கிருஷ்ண வம்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். தமிழில் ரஜினி, சத்தியராஜ், கமல்ஹாசன், சரத்குமார் என பலருடனும் நடித்துள்ளார்.
அதுவும், படையப்பா படத்தில் நீலாம்பரியாக ரம்யா கிருஷ்ணன் கலக்கி இருந்தார். அவரின் திரைவாழ்வில் அந்த நீலாம்பரி வேடம் ஒரு முக்கிய கதாபாத்திரமாக அமைந்து போனது. சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ஜெயிலர் படத்திலும் ரஜினியின் மனைவியாக நடித்திருந்தார்.
இதையும் படிங்க: அஜித் என்னை ஃபீல் பண்ணி கட்டிப்பிடிக்க சொன்னார்… காதல் மன்னன் திலோத்தமா ஷாக்!
ரம்யா கிருஷ்ணன் அம்மனாக நடித்து 1995ம் வருடம் வெளியான திரைப்படம் அம்மன். தெலுங்கில் உருவான இந்த படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வசூலை பெற்றது. அதன் பின் சில படங்களில் அம்மன் வேடத்தில் நடித்திருந்தார். அம்மனாக நடித்த ரம்யா கிருஷ்ணன் சில படங்களில் கவர்ச்சி நடனமும் ஆடியிருக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘அம்மன் படத்தில் நடித்து கொண்டிருந்தபோது சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் படு கிளாமராக உடையணிந்து நடித்தேன். நான் நடித்ததிலேயே அதிக கிளாமர் அதுதான். அந்த படமும், அம்மன் படமும் ஒன்றாகத்தான் வெளியானது. ஆனாலும் ரசிகர்கள் இரண்டு படங்களையும் ஏற்றுக்கொண்டனர். அம்மனாக நான் வரும் காட்சிகளில் கற்பூரமெல்லாம் காட்டினார்கள். இது ஆச்சர்யமாக சிலருக்கு நடக்கும்’ என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: சேரா இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்த பவா செல்லத்துரை! பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டாரா?