அந்த காலத்திலேயே சர்ச்சையை கிளப்பிய கமல் பட பாடல்… ஆண்டவரை காப்பாத்தினதே அவர்தானாம்!…

Published on: October 9, 2023
actor kamalhasan
---Advertisement---

தமிழ் சினிமாவின் கலைக்கூடமாக திகழ்பவர் கமல்ஹாசன். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் தனது குழந்தைபருவம் முதல் சினிமாவில் நடித்து வருகிறார். இவரின் படங்கள் அனைத்தும் பெரும்பாலும் வெற்றியையே சந்தித்துள்ளன. களத்தூர் கண்ணம்மா என்ற திரைப்படத்தின் மூலம் சிறு வயதிலேயே இவர் தனது நடிப்பு திறமையை வெளிக்காட்டினார்.

பின் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, 16 வயதினிலே போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். இவருக்கென பெண் ரசிகர்களும் அதிகம். இவர் நடித்த இளமை ஊஞ்சல் ஆடுகிறது, நினைத்தாலே இனிக்கும் போன்ற பல படங்களில் இவரின் நடிப்பு மிகச்சிறப்பாக அமைந்தது. இவர் நடித்த வசூல்ராஜா, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம் போன்ற திரைப்படங்களின் மூலம் தனது காமெடி கலந்த எதார்த்தமான நடிப்பினை வெளிக்காட்டினார். ஹீரோக்களும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெறலாம் எனும் கண்ணோட்டத்தை உருவாக்கினார். பின் தசாவதாராம் திரைப்படத்தின் மூலம் இவர் உலக அளவில் பேசப்பட்டார்.

இதையும் வாசிங்க:வித்தியாசமா கெட்டப் போடுறேனு வழுக்கிடாதீங்க விஜய்… தலையில் அடித்து சொன்ன டாப் ஹிட் இயக்குனர்..!

பின் இவர் அரசியல் மீது கொண்ட மோகத்தினால் தனி கட்சியை உருவாக்கி தேர்தலையும் எதிர்கொண்டார். ஆனால் அவரால் வெற்றி பெற முடியாதது ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம்தான் விக்ரம். இப்படம் இவருக்கு  மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது மற்றும் வசூலிலும் மிகப்பெரிய சாதனை அடைந்தது. ஆனால் இப்படிபட்டவர் நடித்த படத்தில் உள்ள பாடலுக்கே ஒரு காலத்தில் சோதனை வந்துள்ளது.

இவர் நடிப்பில் 1981ஆம் ஆண்டு வெளியான படம்தான் ராஜபார்வை. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மாதவி நடித்திருந்தார். இப்படத்தினை இயக்குனர் சங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் இயக்கியிருந்தார். இப்படம் கமலுக்கு வெற்றிபடமாக அமைந்தது. இப்படத்தில் வரும் பாடல்தான் அந்திமழை பொழிகிறது..ஒவ்வொரு துளியில் உன் முகம் தெரிகிறது… இப்பாடல் பெரிய அளவில் வெற்றியையும் சந்தித்தது. இப்பாடலை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.

இதையும் வாசிங்க:அம்மன் படத்துல நடிக்கும்போது ஓவர் கிளாமர் காட்டியும் நடித்தேன்!.. ரம்யா கிருஷ்ணன் பகீர் தகவல்!..

இப்படத்தில் கமல்ஹாசன் கண் தெரியாதவராய் நடித்திருப்பார். ஆனால் இப்படத்தில் கமல் வயலின் வாசிக்கும் ஒரு நபர். இந்த பாடலில் எஸ்.பி.பி அவர்கள் பாடல் பாடும்படியும் அதற்கு கமல் வயலின் வாசிக்கும்படியும் காட்சி வந்திருக்கும். அப்பாடல்தான் அந்திமழை பொழிகிறது…ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது பாடல். கதைப்படி கதாநயகனான கமல் கண் தெரியாதவர். அவர் எப்படி மழைதுளிகளை பார்த்திருக்க முடியும் எனும் சர்ச்சை எழுந்துள்ளது.

அதற்கு கவிஞர் வைரமுத்து சரியான பதிலை அளித்துள்ளார். கதைப்படி வேணால் கமல் குருடனாக இருக்கலாம். ஆனால் படத்தில் பாடல் பாடுவதோ எஸ்.பி.பி. அவருக்கு வயலின் வாசிப்பவரே கமல்ஹாசன். கமல் அப்பாடலை வயலின் வாசிக்குபோது உள்வாங்கி அவர் கற்பனையில் வந்ததுதான் இந்த பாடலே தவிர பாடல் பாடியது கமல் அல்ல என பதில் கூறியுள்ளார்.

இதையும் வாசிங்க:கார் டிரைவரை கதாசிரியர் ஆக்கிய எம்.ஜி.ஆர்!.. பல ஹிட் படங்களில் கலக்கிய சம்பவம்!..

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.