அஜித்திடம் தான் யார் என்பதை நிரூபிப்பாரா? மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த மிரட்டலான திரைப்படங்கள்

Published on: October 9, 2023
thiru
---Advertisement---

Ajith vs Magizh Thirumeni: அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மொத்த படக்குழுவும் அஜர்பைஜானுக்கு படையெடுத்து சென்றிருக்கின்றது.

அங்கு படப்பிடிப்பை முடித்த கையோடு அடுத்த கட்ட செட்யூலுக்காக யு.ஏவுக்கு செல்கிறார்களாம். மகிழ் திருமேனி படம் என்றாலே ஆக்‌ஷன் கலந்து த்ரில்லர் படமாகத்தான் இருக்கும் என்பதில் நிச்சயம் சந்தேகமில்லை. ஆனால் அஜித்துக்கும் திருமேனிக்கும் இடையில் இருக்கும் இணக்கம் எந்தளவுக்கு இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: விஜயால் முடியாதது இல்லை என நிரூபித்த ‘தளபதி68’! நடிச்சா ஹீரோனு இருந்தவரை வில்லனாக்கிட்டாங்களே

அந்த வகையில் திருமேனி இயக்கத்தில் வெளிவந்த மிரட்டலான திரைப்படங்களை பற்றித்தான் பார்க்க போகிறோம். முன் தினம் பார்த்தேனே என்ற படத்தின் மூலம் தான் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமானார் மகிழ் திருமேனி.இது காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக வெளியானது. ஆனால் இரண்டாவது படத்திலேயே தன்னுடைய பவரை காண்பித்தார் திருமேனி.

அருண்விஜயை வைத்து தடையறத் தாக்க என்ற படத்தை இயக்கினார். ஒரு சஸ்பென்ஸ் கலந்த கதையம்சத்தோடு இந்த படத்தை நகர்த்திக் கொண்டு போயிருப்பார். இந்தப் படத்தின் ஸ்கிரீன் ப்ளே படு மாஸாக இருக்கும்.

இதையும் படிங்க: அந்த காலத்திலேயே சர்ச்சையை கிளப்பிய கமல் பட பாடல்… ஆண்டவரை காப்பாத்தினதே அவர்தானாம்!…

அடுத்ததாக அதிரடியான ஆக்‌ஷன் படமாக மீகாமன் என்ற படத்தை இயக்கினார். இதில் ஆர்யா, ஹன்சிகா ஆகியோர் நடித்திருப்பார்கள். படம் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்திருக்கும். மகிழ் திருமேனியின் வரலாற்றை புரட்டிப் பார்க்கும் போது கண்டிப்பாக இந்த மீகாமன் திரைப்படமும் ஒரு சிறந்த இடத்தை பெறும்.

அதன் பிறகு தடம் என்ற குற்றப் புனைவு படத்தை இயக்கினார்.இதிலும் அருண்விஜய், தன்யா ஆகியோர்  நடித்திருந்தார்கள். இதுவும் அதிரடியான ஆக்‌ஷன் படமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் படிங்க: உங்க சவகாசமே வேணாம்டா சாமி! இல்லாததுக்கே இவ்ளோ வேலை பாத்துட்டாங்க – ‘லியோ’வால் கடுப்பான ரெட்ஜெயண்ட்

கடைசியாக உதயநிதியை வைத்து கலகத் தலைவன் என்ற படத்தை கொடுத்தார். இதன் மூலம் மகிழ் திருமேனியின் கிராஃப் ஏறுமுகமாகத்தான் இருந்தது. அடுத்ததாக அஜித்தை வைத்து ஒரு வெற்றிகரமான விடாமுயற்சியை கொடுப்பாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.