Connect with us
uthay

Cinema News

உங்க சவகாசமே வேணாம்டா சாமி! இல்லாததுக்கே இவ்ளோ வேலை பாத்துட்டாங்க – ‘லியோ’வால் கடுப்பான ரெட்ஜெயண்ட்

Leo Movie:விஜய் நடிப்பில் வரும் 19 ஆம் தேதி திரைக்கு வரும் திரைப்படம் லியோ. இந்தப் படத்தை லோகேஷ் இயக்க விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருக்கிறார். விஜயுடன் சேர்ந்து அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

லியோ திரைப்படத்திற்கு தமிழ்நாடு மட்டுமில்லாமல் உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஒரு பக்கம் ஜெயிலர் சாதனையை எப்படியாவது முறியடிக்குமா லியோ படம் என்ற ஆர்வம் ரசிகர்களை வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன.

இதையும் படிங்க: கார் டிரைவரை கதாசிரியர் ஆக்கிய எம்.ஜி.ஆர்!.. பல ஹிட் படங்களில் கலக்கிய சம்பவம்!..

இன்னொரு பக்கம் லியோ திரைப்படத்தை இன்னும் மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல லோகேஷ் கடுமையாக  முயற்சித்து வருகிறார். யுடியூப் சேனலை ஓப்பன் செய்தாலே எல்லா சேனல்களுக்கும் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார் லோகேஷ்.

இந்த நிலையில் பெய்டு பிரீமியர் என்ற பெயரில் 18 ஆம் தேதியே லியோ திரைப்படத்தை வெளியிடுவதாக சில தகவல்கள் வெளியானது. ஆனால் அது ஓவர்சீஸில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினால் லலித் இந்த ஐடியாவை நிறுத்தி வைத்திருக்கிறதாம்.

இதையும் படிங்க: வித்தியாசமா கெட்டப் போடுறேனு வழுக்கிடாதீங்க விஜய்… தலையில் அடித்து சொன்ன டாப் ஹிட் இயக்குனர்..!

மேலும் லலித் லியோ படத்தை தனக்கென ஒரு சில ஏரியாக்களில் வாங்கி வைத்திருந்தார். அதை ரெட் ஜெயண்டுக்கே கொடுத்து விடலாமா என்ற யோசனையில் இருந்தாராம். ஆனால் ரெட் ஜெயண்ட் ஆளவிடுங்கடா சாமி என்ற  மன நிலையில் தெறித்து ஓடிவிட்டதாம்.

காரணம் சமீபகாலமாக விஜய்க்கும் உதயநிதிக்கும் இடையே பிரச்சினைகள் இருப்பதாகவும் அதன் காரணமாகவே இசை வெளியீட்டு விழாவை நடத்த விடவில்லை என்றும் சர்ச்சைகள் வந்தன. இப்போது இந்த ஏரியாவை ரெட் ஜெயண்ட் வாங்கி விட்டது என தெரிந்தால் மிரட்டித்தான் வாங்கியிருக்கிறார்கள் என்று ஒரு புதிய சர்ச்சை வந்து விடும். அதனால் வேண்டாம் என மறுத்துவிட்டார்களாம்.

இதையும் படிங்க: அம்மன் படத்துல நடிக்கும்போது ஓவர் கிளாமர் காட்டியும் நடித்தேன்!.. ரம்யா கிருஷ்ணன் பகீர் தகவல்!..

google news
Continue Reading

More in Cinema News

To Top