Connect with us
asin

Cinema News

கன்னத்தில் அறைந்த அசின்!.. அதிர்ந்துபோய் அப்படியே நின்ற விஜய்!.. அட அந்த படத்திலா?!..

Actor vijay: படப்பிடிப்பு தளங்களில் சில சமயம் உணர்ச்சி மிகுதியில் எதிர்பாராத சம்பவங்கள் நடந்துவிடும். கன்னத்தில் அறையும் காட்சிகள் வந்தால் சில சமயம் சில நடிகர்கள், நடிகைகள் உண்மையிலேயே அறைந்துவிடுவார்கள். அதேபோல், முத்தக்காட்சி எடுக்கும்போதும் அப்படித்தான். மனதிற்குள் கட்டுப்பாடு இல்லையெனில் விஷயம் விபரீதமாகிவிடும்.

70,80களில் தமிழ் சினிமாக்களில் நிறைய கற்பழிப்பு காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அந்த காட்சியில் நடிக்கும் நடிகைகளின் நிலையெல்லாம் கந்தரகோலமாகி விடும். நடிகர் அத்துமீறும்போது சில நடிகைகள் அவரின் கன்னத்தில் அடித்த கதையெல்லாம் நடந்திருக்கிறது. இப்போது அதுவெல்லாம் நிறையவே மாறிவிட்டது.

இதையும் படிங்க: லியோ ஸ்பெஷல் ஷோவுக்கும் செக்!.. விஜய் ரசிகர்களை நினைச்சாத்தான் பாவமா இருக்கு!.

ஏனெனில், இப்போது கற்பழிப்பு காட்சிகளை யாரும் எடுப்பதில்லை. ஆனால், பாடல் காட்சிகளில் சில சமயம் அசம்பாவிதம் நடப்பதுண்டு. இது விஜய்க்கே நடந்துள்ளது. பிரபுதேவாவின் இயக்கத்தில் விஜய் – அசின் நடித்த திரைப்படம் போக்கிரி. 2006ம் வருடம் வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.

இந்த படத்தில் ‘டோலு டோலுதான்’ பாடல் காட்சியை பிரபுதேவா எடுத்துக்கொண்டிருந்தார். ஒரு ஷாட்டில் விஜயின் கன்னத்தில் அசின் தனது இரண்டு கைகளையும் ரொமாண்டிக்காக வைப்பது போல் காட்சி எடுக்கப்பட்டது. உணர்ச்சி மிகுதியில் அசின் விஜயின் கன்னத்தில் கிட்டத்தட்ட அடித்தே விட்டாராம்.

இதையும் படிங்க: லியோவை மொத்தமாக கழட்டி விட்ட விஜய்?.. தனியாளாக தொண்ட தண்ணி வத்த போராடும் லோகேஷ் கனகராஜ்!..

இதனால், சில வினாடிகள் என்ன நடக்கிறது என்பதே புரியாமல் அப்படியே நின்றிருக்கிறார் விஜய். அதன்பின் ஷெரின் அவரிடம் சாரி சொல்லிய பின்னே அவர் நார்மல் மோடுக்கு வந்தாராம். அதன்பின் மீதி காட்சிகளை எடுத்துள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையை எல்லா நடிகர்களுமே சந்தித்திருப்பார்கள்.

அசின் விஜயுடன் சிவகாசி, போக்கிரி, காவலன் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இப்போது திருமணமாகி செட்டில் ஆகி குழந்தைக்கும் அம்மா ஆகிவிட்டார். அதோடு, அவர் சினிமாவிலும் நடிப்பதில்லை.

இதையும் படிங்க: விஜய் ஒத்துக்கவே இல்லை! வேண்டானு சொல்லியும் கேட்கல – லியோ பூஜையிலயே ஸ்டிரிட் ஆர்டர் போட்ட தளபதி

Continue Reading

More in Cinema News

To Top