உங்க படத்தை ஓட வச்சதே நாங்கதான்…நண்பன்னு கூட பார்க்காம வெளுத்து வாங்கிய சிவாஜி…

Published on: October 10, 2023
actor sivajiganesan
---Advertisement---

தமிழில் பராசக்தி திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஆரம்பத்தில் மேடை கலைஞராய் இருந்த சிவாஜி கணேசன் தனது முயற்சியினால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தமிழில் பல வெற்றி படங்களை கொடுத்த சிவாஜி கணேசன் தமிழ் மீது அதிக அளவில்  நாட்டம் கொண்டவர்.

இவர் உத்தமபுத்திரன், பாசமலர், கர்ணன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கர்ணன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனது நடிப்பு திறமையை உலகறிய செய்தார். இவர் ஆங்கிலத்தில் சரளமாய் பேசக்கூடியவர். பல ஆங்கில தொலைகாட்சிகளில் ஆங்கிலத்திலேயே உரையாடியுள்ளார். தான் ஒரு இந்தியன் என்பதில் மிகவும் பெருமிதம் கொள்பவர் நடிகர் திலகம்.

இதையும் படிங்க:ஒரு கோடி சம்பளமாக வாங்கிய ஒரே படம்… தயாரிப்பாளரையே தப்பாக நினைத்த சிவாஜி கணேசன்!

இவர் அக்காலத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட ஒரு நடிகரும் கூட. இவர் தேவர் மகன், ஒன்ஸ் மோர், படையப்பா போன்ற படங்களில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் அரசியல் மீது கொண்ட ஆர்வத்தினால் அரசியலிலும் சிறிது காலம் வலம் வந்தார். ஆனால் அது இவருக்கு நிலைக்கவில்லை.

இவர் தமிழ் மீது மிகுந்த பற்றுள்ளவர். இவரின் தமிழ் பற்றையும் தமிழ்நாட்டின் மீதுள்ள இவரின் அன்பையும் குறிக்கும் விதமாக ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. தமிழில் எங்கள் வீட்டு மகாலெட்சுமி, கலைவாணன் போன்ற திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் நாகேஷ்வர ராவ். இவர் ஒரு தெலுங்கு நடிகரும் கூட. அந்த காலத்தில் சென்னையில்தான் அனைத்து மொழி படங்களின் படபிடிப்புகளும் நடக்கும். மேலும் நாகேஷ்வரராவ் தெலுங்கு நடிகரானாலும் தமிழிலும் பல திரைபப்டங்களில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க:சினிமாவிற்கு முழுக்கு போட்ட பத்மினி…. தனது பாடல் மூலம் பழி வாங்கிய கண்ணதாசன்…

தமிழில் இவர் நடித்த திரைப்படம்தான் எங்கள் செல்வி. இத்திரைப்படத்தினை யோகானந்த் இயக்கினார். இப்படத்தின் கடைசி நாளை கொண்டாடும் விதமாக திரையுலகினருக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் நாகேஷ்வர ராவ். அந்நிகழ்ச்சியில் நடிகர் திலகமும் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிய ராவ் நான் தமிழில் நன்றாகத்தான் நடிக்கிறேன். ஆனால் இங்குள்ள தமிழ் மக்கள் தூண்டுதலால் பத்திரிக்கையாளர்கள் என்னை திட்டுகிறார்கள். அத்தகைய தமிழ் மக்களுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பதான் இந்த விருந்து என தமிழர்களை குறைவாக பேசியுள்ளார்.

இதை கேட்ட சிவாஜி கோபத்தில் நண்பரே!.. உங்கள் மாநிலத்திற்கு நீங்கள் நடிக்க போகிறீர் என்றால் அதற்கு எதற்கு தமிழர்களை இழிவாக பேசுகிறீர்கள்… நீங்கள் தெலுங்கில் நடித்த தேவதாஸ் படத்தினை 100 நாட்கள் ஓட வைத்தது இந்த தமிழர்கள்தான். மேலும் அப்படத்தினை தமிழில் மொழிபெயர்த்தபின் அதனை வெற்றிபெற செய்ததும் இந்த தமிழர்கள்தான். உங்களுக்கு அதிக பணம் கிடைப்பதால் நீங்கள் ஆந்திராவிற்கு போகிறீர்கள். அதற்கு தமிழர்களை குறை சொன்னால் அது எவ்வாறு பொருந்தும். அதனை என்னால் ஏற்றுகொள்ள முடியாது என நடிகர் திலகம் கூறினார். பின் மனம் வருந்திய நாகேஷ்வர ராவ் சிவாஜியிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

இதையும் படிங்க:முதலிரவுக்கு போட வேண்டிய பாடலா இது? வாலி எழுதியதை மாற்றச் சொன்ன மெய்யப்பச் செட்டியார்

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.