Connect with us
Vaali

Cinema History

முதலிரவுக்கு போட வேண்டிய பாடலா இது? வாலி எழுதியதை மாற்றச் சொன்ன மெய்யப்பச் செட்டியார்

Lyricist Vaali : அந்தக் காலத்தில் வார்த்தை வித்தக கவிஞராக இருந்தவர் வாலி. கண்ணதாசன், வாலி போன்ற கவிஞர்கள் இருந்ததினால்தான் பல நல்ல நல்ல கருத்துக்களை உடைய பாடல்களை நம்மால் கேட்க முடிந்தது.

அதுமட்டுமில்லாமல் அந்த காலங்களில் எல்லாம் பாடலை எழுதி முடித்து விட்டோம், வேலை முடிந்து விட்டது என்ற நிலையெல்லாம் கிடையாது. படத்தின் தயாரிப்பாளர் வந்து அந்த பாடல் வரிகளை கேட்டு அவருக்கு ஏதாவது குறைகள் இருந்தால் அதில் திருத்தம் சொல்வது வழக்கம்.

இதையும் படிங்க: அஜித்திடம் தான் யார் என்பதை நிரூபிப்பாரா? மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளிவந்த மிரட்டலான திரைப்படங்கள்

அந்த வகையில் சிவாஜியின் படத்தில் ஒரு பாடலுக்காக வரிகளை எழுதிய வாலியின் பாடலை பார்த்து மெய்யப்பச்செட்டியார் என்னய்யா எழுதியிருக்க? என்று கேட்டிருக்கிறார். உயர்ந்த உள்ளம் படத்திற்காக எல்லா பாடல்களையும் வாலிதான் எழுதினாராம்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க வாணிஸ்ரீ மற்றும் சிவாஜி சம்பந்தப்பட்ட ஒரு முதலிரவு பாடலில் தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது ‘ நான் வெள்ளித்தட்டுத்தான் தங்கக் கைகளில் முத்துப்புன்னகை வைரக் கண்களில்’ என வாலி எழுதினாராம்.

இதையும் படிங்க: விஜயால் முடியாதது இல்லை என நிரூபித்த ‘தளபதி68’! நடிச்சா ஹீரோனு இருந்தவரை வில்லனாக்கிட்டாங்களே

இதை கேட்ட மெய்யப்பச்செட்டியார் வாலியை வெளியே வரவழைத்து என்னய்யா எழுதியிருக்கிறீர்? வெள்ளி என்றால் பணம். தட்டு என்றால் தட்டுப்பாடு. பணம் தட்டுப்பாடு என்பது போல் பொருள் மாறிவிடும் என்று சொல்லியிருக்கிறார்.

அதன் பிறகே வாலி வெள்ளித்தட்டு என்பதற்கு பதிலாக வெள்ளிக் கிண்ணம் என்று மாற்றினாராம். இப்படி பல சம்பவங்கள் மெய்யப்பச்செட்டியாருக்கும் வாலிக்கும் இடையே நடந்திருக்கிறது.

இதையும் படிங்க: அந்த காலத்திலேயே சர்ச்சையை கிளப்பிய கமல் பட பாடல்… ஆண்டவரை காப்பாத்தினதே அவர்தானாம்!…

ஆனால் இதை பெரிய அளவில் பிரச்சினை எல்லாம் செய்ததே கிடையாது. அவர்களுக்குள் நல்ல முறையிலான ஒரு இணக்கம் இருந்து கொண்டே வந்தது. ஆனால் இந்தக் காலத்தில் யாராவது குறை சொன்னால் என்னை விட பெரிய ஆளா இவன் ?  என்று சண்டைக்கு வந்து விடுவார்கள்.அந்தளவுக்கு அந்த காலகட்டத்தில் ஒரு சுமூகமான உறவு கலைஞர்களுக்குள் இருந்தது என்பதையே இந்த தகவல் நமக்கு தெளிவு படுத்துகிறது.

google news
Continue Reading

More in Cinema History

To Top