நீ மட்டும் யோக்கியமா?.. கெட்ட வார்த்தையே பேச மாட்டீங்க!.. விஜயை திட்டி வசமாக சிக்கிய கஸ்தூரி….

Published on: October 10, 2023
---Advertisement---

நடிகை கஸ்தூரி லியோ படத்தின் டிரைலரில் நடிகர் விஜய் பேசிய ஆபாச வசனத்திற்கு எதிராக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். டிரைலர் ரிலீஸ் ஆன உடனே ஏகப்பட்ட பிரபலங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்திலேயே கெட்ட வார்த்தையை பேச வைத்திருப்பார் லோகேஷ் கனகராஜ். ஆனால், சென்சாருக்கு பிறகு அந்த வார்த்தையும் மியூட் செய்யப்பட்டது.

இதையும் படிங்க: இன்ட்ரோல பாசமலர் பாட்டு.. புடிச்சிட்டேன்.. லியோ ஹாலிவுட் காப்பியில்ல.. ஜெயிலர் பட காப்பி!..

அதே போல விக்ரம் படத்தில் உலக நாயகன் என கொண்டாடப்படும் கமல்ஹாசனும் கெட்ட வார்த்தை பேசி நடித்திருப்பார். அந்த வார்த்தையும் கடைசியில் மியூட் செய்து விட்டனர். மியூட் செய்வார்கள் என்று தெரிந்தாலும், கெட்ட வார்த்தையை படங்களில் வைக்காமல் லோகேஷ் கனகராஜ் இருக்கவே மாட்டார் என்றே தெரிகிறது.

வெற்றிமாறன் மாதிரி ஏ சான்றிதழ் வாங்கிக் கொண்டு அசிங்கமான வார்த்தையை வைக்க நினைத்திருப்பார் போல, ஆனால், விஜய் படத்துக்கு குடும்ப ரசிகர்கள் முக்கியம் என்பதால் யு/ஏ சான்றிதழ் வாங்கிக் கொண்டு அனைத்து ஆபாச வசனங்களையும் மியூட் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ஷூட்டிங் வந்த இடத்துல காதலுடன் கசமுசா!.. கடுப்பான பிரபல நடிகர்.. ஹீரோயினையே மாத்த இதுதான் காரணமா?..

இந்நிலையில், படம் வெளியாவதற்கு முன்னதாக டிரெய்லரில் அந்த ஆபாச வசனங்களுக்கு தடை இல்லாத நிலையில், அதை வெளியிட்டுள்ளனர். அதை பார்த்த பலரும் பொங்கி சமூக அக்கறையே விஜய்க்கு இல்லையா என விளாசி வருகின்றனர். நடிகை கஸ்தூரி தனது பங்குக்கு விஜய்க்கு ஏகப்பட்ட குழந்தைகள் ரசிகர்களாக உள்ள நிலையில், இப்படி பேசலாமா? என்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கையாளாகதத் தனம் தான் தெரிகிறது என்றும் விளாசி உள்ளார். ஏற்கனவே மங்காத்தாவில் அஜித்தும் இதைத்தான் செய்திருந்தார் என்றார்.

அவரது இந்த பேட்டியை ஷேர் செய்த மூடர்கூடம் இயக்குனர் நவீன்,  ”ட்வீட்டுகு ட்வீட்டு ‘திராவிடியா பசங்க’ என்று எழுதும் சகோதரி கஸ்தூரி இதை சொல்வதுதான் நகைமுரண்” என கழுவி ஊற்றியுள்ளார்.

 

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.