லோகேஷுக்கு ஏழரையே இவன் தான்!.. அந்த இயக்குனரை போட்டு பொழக்கும் அஜித் ரசிகர்கள்.. என்ன காரணம்?

Published on: October 12, 2023
---Advertisement---

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ஏழரை கூட்டி வருவதே அவருடன் ஒட்டுண்ணியாக ஒட்டிக் கொண்டிருக்கும் இயக்குனர் ரத்னகுமார் தான் என ரஜினிகாந்த் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் போட்டு பொளந்து வருகின்றனர்.

லவ் டுடே படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் எப்படி பழைய ட்வீட்களை ரஜினிகாந்த், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் குறித்து அவதூறாக ட்வீட் போட்டிருந்தாரோ, அதை விட மோசமாக நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் உள்ளிட்ட பலரை விமர்சித்து சோஷியல் மீடியாவில் ரத்னகுமார் போஸ்ட்டுகளை போட்டுள்ளதாக தற்போது ரசிகர்கள் அந்த பழைய விஷமம் புடித்த போஸ்ட்டுகளை தோண்டி எடுத்து லியோ படத்தின் ரிலீஸை முன்னிட்டு ரத்னகுமாரை விளாசி வருகின்றனர்.

இதையும் படிங்க: கோயிந்தா கோயிந்தா!.. லியோ படம் நல்லா வசூல் ஆகணும் கோயிந்தா.. லோகேஷ் எங்கே இருக்காரு பாருங்க!..

மேயாத மான் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ரத்னகுமார் அமலா பாலை நிர்வாணமாக நடிக்க வைத்து எடுத்த ஆடை திரைப்படம் மிகப்பெரிய அதிர்வலைகளை தமிழ் சினிமாவில் எழுப்பியது.

அதுவரை எந்தவொரு இயக்குனரும் நினைத்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பல நாட்கள் அமலா பாலை அந்த கோலத்திலேயே வைத்து படத்தை எடுத்து வெளியிட்டு அமலா பாலின் திரை வாழ்க்கையையே டோட்டலாக க்ளோஸ் செய்தவர் தான் ரத்னகுமார்.

இதையும் படிங்க: அவன் நடிச்ச படமா ஓடுச்சு.. நான் தான் ஹிட் மெஷின்.. ஹீரோவை விட அதிகமாக சம்பளம் கேட்கும் வில்லன்?

மாஸ்டர் படத்தில் இருந்து லோகேஷ் கனகராஜ் டீமில் இணைந்து பணியாற்றி வரும் ரத்னகுமார் லியோ படத்திலும் வேலை செய்துள்ளார். விஜய்க்கும் லோகேஷ் கனகராஜுக்கும் இடையே பிரச்சனை என வதந்தி கிளம்பிய நிலையில், ரத்னகுமார் தான் அந்த படத்தையே இயக்கினார் என்றும் கிளப்பி விட்டனர். இந்நிலையில், ரத்னகுமாருக்கு எதிராக “Continue HIT கொடுத்த லோகேஷே அமைதியா ஆரவாரம் இல்லாம தன்னடக்கமா பேசிட்டு இருக்காப்ல… குளு குளு னு ஒரு படத்தை எடுத்து வச்சிட்டு பெரிய **** மாறி இதுல தல மூஞ்சிய கிண்டல் பன்னிட்டு இருக்கான் இவன்… @Dir_Lokesh Brother இவன் ஓழுங்கா இல்லனா LCU படம் ICU. படமா மாறிடும் பாத்துக்க….” என போட்டுத் தாக்கி வருகின்றனர்.

அடுத்து ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை லோகேஷ் இயக்கும் போதும் ரத்னகுமார் பணியாற்றினால் இவர்கள் என்ன சொல்வார்கள் என்பது தான் கேள்வியாக உள்ளது.

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.