Cinema History
திருவிளையாடல் தருமி வேடத்தை நாகேஷ் எங்கிருந்து சுட்டார் தெரியுமா?.. ஒரு ஆச்சர்ய தகவல்..
Actor Nagesh: தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த நடிகர்களை வரிசைப்படுத்தினால் அதில் நாகேஷ் நிச்சயம் இருப்பார். காமெடி, குணச்சித்திரம், வில்லன் என நடிப்பில் வெரைட்டி காட்டி நடித்த நடிகர் இவர். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தில் மத்திய அரசு பணியை விட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தவர் இவர்.
சின்ன சின்ன வாய்ப்புகள் கிடைத்து நடிக்க துவங்கினார். ஒல்லியான தேகம், பாக்கா டைமிங் என ரசிகர்களை கவர்ந்தார். வித்தியாசமாக நடனமும் ஆடுவார். எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களில் நிச்சயம் நாகேஷ் இருப்பார். ஒரே நாளில் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு நடிக்கமளவுக்கு மிகவும் பிஸியான நடிகராக இருந்தார் நாகேஷ்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை நக்கலடித்த நாகேஷ்.. படத்தின் மூலம் பதில் சொன்ன பொன்மன செம்மல்!..
எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற ஹீரோக்களின் படங்களின் வெற்றிக்கே நாகேஷ் தேவைப்பட்ட காலம் அது. இதனால், நாகேஷ் வருகைக்காக அவர்கள் படப்பிடிப்பில் காத்திருந்த காலங்களும் உண்டு. எம்.ஜி.ஆர், சிவாஜி மட்டுமில்லாமல் ஜெய் சங்கர் போன்ற மற்ற நடிகர்களுடனும் நாகேஷ் நடித்துள்ளார். எதிர் நீச்சல், சர்வர் சுந்தரம் உட்பட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.
நாகேஷ் பல திரைப்படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் திருவிளையாடல் படத்தில் அவர் ஏற்ற தருமி வேடத்தை யாராலும் மறக்கமுடியாது. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நகைச்சுவை காட்சி அது. தனது வாழ்வில் சந்திக்கும் மனிதர்களின் வித்தியாசமான மேனரிசத்தை உள்வாங்கி அதை தனது பாணியில் வெளிப்படுத்துவார் நாகேஷ். திருவிளையாடல் படத்தில் நாகேஷ் கோவிலில் தனியாக தானாகவே புலம்பி கொண்டிருப்பார்.
இதையும் படிங்க: மகன் பிறந்தும் பார்க்க போகாத நாகேஷ்!.. காமெடி நடிகருக்குள் இவ்வளவு சோகமா?!…
உண்மையில் மயிலாப்பூர் தெப்பக்குளம் அருகே வசித்து வந்த ஒரு பிராமணர் எப்போதும் இப்படத்தில் கோவிலில் தனியாக தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்து அதுபோல புலம்பிக் கொண்டிருப்பாராம். அதை கவனித்த நாகேஷ் கொஞ்சம் மாற்றி தருமி வேடத்திற்காக பயன்படுத்திக்கொண்டாராம் நாகேஷ். நடிப்பே திருடுவதுதான் என நாகேஷ் அடிக்கடி சொல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், அந்த காட்சி எடுக்கும்போது சிவாஜி வர தாமதமானது. அதையும் வசனத்தில் பயன்படுத்திக்கொண்ட நாகேஷ் ‘அவன் வரமாட்டான்.. அவன் வரமாட்டான்’ என பேசி ஸ்கோர் செய்திருக்கிறார். இயக்குனரும் ஓகே சொல்ல அந்த காட்சியும் படத்தில் இடம் பெற்றிருந்தது. இப்படி தன்னை சுற்றி நடப்பவை எல்லாவற்றையும் காமெடிக்காக பயன்படுத்தியவர்தான் நாகேஷ்.
இதையும் படிங்க: நீங்க இப்படி செய்யலாமா?!.. கடுப்பான சென்சார் போர்ட் அதிகாரி!.. காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட நாகேஷ்…