எம்.ஜி.ஆரை நக்கலடித்த நாகேஷ்.. படத்தின் மூலம் பதில் சொன்ன பொன்மன செம்மல்!..

மத்திய அரசு பணியை விட்டு நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தில் சினிமாவுக்கு வந்தவர் நாகேஷ். கவிஞர் வாலியும், அவரும் ஒரே அறையில் தங்கியிருந்துதான் சினிமாவில் வாய்ப்பு தேடினார்கள். துவக்கத்தில் நாடகங்களிலும் நாகேஷ் நடித்துள்ளார். அதன்பின் சினிமாவில் நுழைந்தார்.

டைமிங் காமெடி, உடலை வளைத்து ஆடும் நடனம், அபாரமான நடிப்பு என ரசிகர்களை கவர்ந்தார். ஒருகட்டத்தில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் மாறினர். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய்சங்கர், ஜெமினி கணேசன் என பலரின் படங்களிலும் நடித்தார். எம்.ஜி.ஆர் - சிவாஜியை விட பிஸியான நடிகராகவும் மாறினார்.

இதையும் படிங்க: கோபத்தில் வீட்டின் முன்பு கூடிய ரசிகர்கள்!.. பயந்து போன நம்பியார்… ஓடி வந்த எம்.ஜி.ஆர்..

எப்படியெனில் ஒரு நாளைக்கு 5 படங்களிலெல்லாம் நடிப்பார். மாறி மாறி வெவ்வேறு ஸ்டுடியோக்களுக்கு சென்று நடிப்பார். படப்பிடிப்பு தளங்களில் நாகேஷ் வரும்வரை எம்.ஜி.ஆர், சிவாஜி எல்லாம் கூட காத்திருப்பார்கள். ஏனெனில், படத்தின் வெற்றிக்கு நாகேஷ் தேவைப்பட்ட காலம் அது. ஆயிரத்தில் ஒருவன், எங்க வீட்டு பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் எம்.ஜி.ஆருடன் நடித்துள்ளார்.

நாகேஷ் கொஞ்சம் துடுக்காக பேசி விடுவார். சில இடங்களில் நடிகர்களை நக்கலடித்துவிடுவார். எம்.ஜி.ஆர் சொந்தமாக தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. ஜப்பான், மலேசியா, ஹாங்காக் என பல இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தியிருந்தார் எம்.ஜி.ஆர். இந்த படத்திலும் நாகேஷ் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: கடனில் சிக்கிய சிவாஜி பட இயக்குனர்!.. கை கொடுத்து தூக்கிவிட்ட எம்.ஜி.ஆர்!.. அட அந்த படமா?!..

இந்த படம் உருவானபோது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த நாகேஷ் ‘லட்சம் லட்சமாக செலவழித்து இந்த படத்தை எம்.ஜி.ஆர் எடுக்கிறார். ஆனால், கதை என்னவென்றே தெரியவில்லை. இந்த பக்கம் நட என்கிறார். அந்த பக்கம் ஓடு என்கிறார். இப்படி நடனமாடு என்கிறார். அவர் சொன்னதை நாங்களும் செய்கிறோம். இது எல்லாம் கதைக்கு எப்படி பொருந்துகிறது என்பது தெரியவில்லை. இப்படியெல்லாம் படமெடுத்தால் ஓடுமா?’ என்றெல்லாம் கொஞ்சம் அதிகமாக பேசிவிட்டார்.

இது எம்.ஜி.ஆரின் காதுக்கு சென்றுவிட்டது. ஆனால், அவர் நாகேஷிடம் எதுவுமே கேட்கவில்லை. அவர் ஒரு சிறந்த எடிட்டர். முழுப்படத்தையும் எடிட் செய்து நாகேஷை அழைத்து போட்டு காட்டி ‘என்ன நாகேஷ் இந்த படம் பற்றி உங்களின் சந்தேகமெல்லாம் தீர்ந்துவிட்டதா?’ எனக்கேட்டுள்ளார். அப்போதுதான் தான் பேசியது எம்.ஜி.ஆரின் காதுக்கு போய்விட்டது என்பது நாகேஷுக்கு புரிந்ததாம்.

இந்த தகவலை நாகேஷே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: அன்பே வா படப்பிடிப்பில் எம்.ஜி.ஆர் செய்த வேலை!.. நெகிழ்ந்து போன ஏவிஎம் சரவணன்…

 

Related Articles

Next Story