Connect with us

Cinema News

பாக்கியலட்சுமிக்கே டஃப் கொடுப்பீங்க போலவே கணேஷ்… ரொம்ப ஓவரால இருக்கு..!

Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பழனிச்சாமியை வீட்டில் வந்து சந்திக்கிறார் பாக்கியா. பழனிச்சாமி அம்மாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டு இருப்பதால் பார்க்க வர முடியவில்லை எனக் கூறுகிறார். பரவாயில்லை சார் எனச் சொல்லிவிட்டு பாக்கியா பேசிக்கொண்டு இருக்கிறார்.

உங்களுக்கு எதுவும் பணத்தேவை இருந்தா? சொல்லுங்க நான் செய்றேன் எனக் கேட்கிறார். இல்லை சார் எதுவும் இப்போ தேவையில்லை. நானே சமாளிக்கிறேன் எனக் கூறி விட்டு கிளம்புகிறார். 

இதையும் படிங்க: பொன்மேனி உருகுது!.. டாப் ஆங்கிளில் தாராளம் காட்டும் அயலான் ஹீரோயின்.. அத்தனையும் அழகு தான்!..

அதையடுத்து வீட்டில் இருந்து வெளியில் கிளம்பும் எழில் மற்றும் அம்ருதாவை கோபத்துடன் பார்த்து கொண்டு இருக்கிறார் கணேஷ். பைக்கில் ஏறும் அம்ருதாவை தன் இடுப்பில் பிடித்து கைப்போட சொல்கிறார் எழில். இதை பார்த்த கணேஷ் கோபமாக வந்து நிற்க, பாக்கியா குழப்பத்துடன் பார்த்து கொண்டு நிற்கிறார்.

பிறகு பார்க்கில் நிலாவுடன் விளையாடி கொண்டு இருக்கிறார் ராமமூர்த்தி. நிலா குறித்து ஆசையாக பேசிக்கொண்டு இருக்க கணேஷ் பெருமையாக பார்த்து கொண்டு இருக்கிறார். அதை தொடர்ந்து வீட்டில் இருக்கும் செல்வியிடம் சம்பளம் பத்தி கேட்டு கொண்டு இருக்கிறார்.

எனக்கு இப்போ வீட்டு சம்பளம் மட்டும் கொடு எனக் கேட்கிறார். எப்போனாலும் கொடுத்து தானே ஆகணும் வாங்கிக்கோ என்கிறார். எனக்கு தெரியாம கடன் வாங்குனியா எனக் கேட்க நீ வேற வாங்கிய கடனையே அடைக்கல.. இதுல புது கடனா? நகையை அடகு வச்சிட்டேன் எனக் கூறுகிறார்.

இதையும் படிங்க: அஜித் 63ன் பட்ஜெட் இதுதான்!. சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?!.. இதெல்லாம் எங்க போய் முடியுமோ!…

கேண்ட்டீனில் இருந்து வர வேண்டிய பணம் வந்தால் கொஞ்சம் பிரச்னை சரியாகும் என்கிறார். அம்ருதா நான் மெயில் செய்து பார்ப்பதாக கூறுகிறார். பிறகு சென்னை வந்த கணேஷ் பெற்றோர் அவருக்கு கால் செய்து பார்க்கணும் என்கின்றனர். நாங்களே சென்னை வந்து இருக்கோம் என அட்ரஸ் கூறி பார்க்க வர கூறுகிறார்கள். அவர்கள் கவலையில் நிற்க இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.

Continue Reading

More in Cinema News

To Top