Connect with us
ajith

Cinema News

அஜித் 63ன் பட்ஜெட் இதுதான்!. சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?!.. இதெல்லாம் எங்க போய் முடியுமோ!…

Ajithkumar 63: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். சாக்லேட் பாயாக சினிமாவில் நடிக்க துவங்கி பல படங்களிலும் அது போன்ற வேடத்திலேயே நடித்தார். இவர் நடித்ததில் பெரும்பாலானவை காதல் படங்கள்தான். சினிமாவில் எந்த பின்னணியும் இல்லமால் வளர்ந்தவர் இவர்.

ஒருகட்டத்தில் ஆக்‌ஷன் கதைகளில் நடிக்க துவங்கி தனது ரூட்டை மாற்றினார். பில்லா படம் அவரை ஸ்டைலீஸ் ஹீரோவாக காட்ட மங்காத்தா அவரை மாஸ் நடிகராக மாற்றியது. அவருக்கு அதிகமான ரசிகர்களும் உண்டானார்கள். அதன்பின் மாஸ் காட்சிகள் இருக்கும் இருக்கும் ஆக்‌ஷன் கதைகளில் அதிகம் நடிக்க துவங்கினார்.

இதையும் படிங்க: பேடாஸும்மா.. ஐமேக்ஸ்மா!.. அடிபொலி.. அடுத்து அடுத்து ஹைப்பை எகிற வைக்கும் லியோ டீம்!..

விஜயின் போட்டி நடிகராக பார்க்கப்பட்டாலும் அஜித் விஜயை விட குறைவான சம்பளத்தை பெற்று வந்தார் ஆனால், சமீபகாலமாக அவரின் சம்பளம் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. 2 படங்களுக்கு முன் 65 கோடி வாங்கி வந்தவர் இப்போது ரூ.100 கோடி சம்பளத்தை தாண்டிவிட்டார்.

லைக்கா நிறுவனத்தில் இப்போது அஜித் நடித்துவரும் விடாமுயற்சி படத்திற்கு அவருக்கு பேசப்பட்ட சம்பளம் ரூ.105 கோடி என சொல்லப்படுகிறது. இந்நிலையில், அடுத்து எல்ரட் குமார் தயாரிப்பிலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும் அஜித் நடிக்கவுள்ள படத்திற்கு அஜித்துக்கு ரூ.165 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விஜய் மிஸ் பண்ணத தட்டி தூக்கும் ரஜினி!.. தலைவர் 171-ல் பென்ச் மார்க் கிரியேட் பண்ணும் சூப்பர் ஸ்டார்..

இந்த படத்தின் பட்ஜெட் ரூ.225 கோடி. அதாவது அஜித் சம்பளம் போக ரூ.60 கோடியில் படம் உருவாகவுள்ளது. இப்போதெல்லாம் படத்தின் பட்ஜெட்டில் 80 சதவீதம் ஹீரோவின் சம்பளத்திற்கே போய் விடுகிறது. விஜய், ரஜினி நடித்து வரும் படங்களுக்கும் இதேதான் கதை.

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படத்திற்கு அவரின் சம்பளம் ரூ.90 கோடி. மற்ற நடிகர்களின் சம்பளம் ரூ.45 கோடி. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.165 கோடி. வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் பட்ஜெட் 230 கோடி. இதில் விஜய்க்கு சம்பளம் ரூ.200 கோடி. மீது 30 கோடியில்தான் படமே உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விஜய் மட்டுமில்ல!.. பிரசாந்துக்கும் சம்பவம் பண்ண போகும் வெங்கட்பிரபு!.. தளபதி 68 தெறி அப்டேட்…

google news
Continue Reading

More in Cinema News

To Top