பேடாஸும்மா.. ஐமேக்ஸ்மா!.. அடிபொலி.. அடுத்து அடுத்து ஹைப்பை எகிற வைக்கும் லியோ டீம்!..

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ திரைப்படம் கடந்த பல மாதங்களாக எதிர்பார்ப்புகளை கிளப்பி வந்த நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களை தெறிக்க விட காத்திருக்கிறது.

ஹாலிவுட் படங்கள் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகி வரும் நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ்-ல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, கௌதம் மேனன், பிரியா ஆனந்த், மிஷ்கின், அனுராக் காஷ்யப், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், சாண்டி மற்றும் குழந்தை நட்சத்திரம் இயல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் ஐமேக்ஸ் திரையரங்குகளில் தமிழ்நாட்டிலும் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: பாவம் பூஜா ஹெக்டேவுக்கு படம் தான் கிடைக்கலைன்னா!.. படுக்க இடம் கூட கிடைக்கலையே?..

அந்த அறிவிப்புடன் வெளியாகியுள்ள லியோ தாசின் பேடாஸ் போஸ்டர் ரசிகர்களை புல்லரிக்க செய்துள்ளது. லியோ படத்துக்கு காலை 7:00 மணி முதல் இரவு 10:00 மணிக்கு காட்சி வரை முதல் ஐந்து நாட்கள் ஐந்து சிறப்பு காட்சிகளை திரையிட தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் சில திரையரங்குகள் ஒரு அக்டோபர் 14-ஆம் தேதி முதல் டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்க உள்ளதாகவும் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். லியோ டிரைலரை தவிர படக்குழு கடைசி வரை வேறு எந்த பெரிய புரோமோஷனையும் நடத்தாமல் படத்தை வெளியிட உள்ள நிலையில் தமிழ்நாட்டைத் தவிர மற்ற மாநிலங்களில் வசூல் பெரிதும் பாதிக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: விஜய் மட்டுமில்ல!.. பிரசாந்துக்கும் சம்பவம் பண்ண போகும் வெங்கட்பிரபு!.. தளபதி 68 தெறி அப்டேட்…

 

Related Articles

Next Story