Connect with us

Cinema News

லியோவில் முக்கியமானதே இதுதான்!.. மிஸ் பண்ணிடாதீங்க.. அப்புறம் வருத்தப்படுவீங்க.. அண்ணாச்சியாக மாறிய லோகி!..

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் இன்னும் ஐந்து நாட்களில் வெளியாக உள்ள நிலையில் அதற்கான டிக்கெட் புக்கிங் பல இடங்களில் தீயாக நடைபெற்று வருகிறது.

ஜெயிலர் படத்துக்கு கிடைக்காத சிறப்பு காட்சிக்கான அனுமதி லியோ படத்துக்கு கிடைத்துவிட்டது என விஜய ரசிகர்கள் ஆட்டம் போட்டு வந்த நிலையில், முதல் காட்சி 9:00 மணிக்கு தான் ஆரம்பிக்க வேண்டும் இன்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் விஜய் ரசிகர்கள் பயங்கர அப்செட் ஆகி உள்ளனர்.

இதையும் படிங்க: இன்னும் யார் குடியெல்லாம் கெடுத்தாரோ? விதார்த்துக்கு கிடைத்த வாய்ப்பை கெடுத்த வைகை புயல்

இந்நிலையில், லியோ படத்தை தனியாளாக ப்ரொமோட் செய்து வரும் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் நீயா நானா கோபிநாத்துக்கு அளித்த பேட்டியில் சொன்ன முக்கியமான விஷயம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பொதுவாக படம் தொடங்கும் போது சற்று தாமதமாகவே பலர் தியேட்டருக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. படம் ஆரம்பித்து 10 நிமிடங்கள் கழித்து எல்லாம் மக்கள் தியேட்டருக்குள் வருவார்கள். ஆனால் இந்த படத்தின் முதல் 10 நிமிடங்கள் முக்கியமானது என்றும் அதனை மிஸ் செய்ய வேண்டாம் என்று லோகேஷ் கனகராஜ் ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: ரஜினி போட்ட போன் கால் பார்த்த வேலை தானா இது?.. லியோ ரிலீசுக்கு இன்னும் என்னவெல்லாம் சிக்கல் வருமோ?.

ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உழைப்பு அந்த முதல் காட்சியில் இருப்பதாகவும் அந்த அனுபவத்தை ரசிகர்கள் மிஸ் செய்யாமல் முன்கூட்டியே தியேட்டருக்கு வந்து படத்தை ரசிக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக கூறியிருக்கிறார்.

பிவிஆர் உள்ளிட்ட மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ரசிகர்கள் படத்தில் எந்த ஒரு காட்சியையும் தவற விட்டு விடக்கூடாது என்பதற்காக அறிவித்த நேரத்தை விட கூடுதலாக 10 நிமிடங்கள் கழித்து படத்தை வெளியிடுவது வாடிக்கையாக உள்ளது.

ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் படத்தின் கதைதான் லியோ என்றால் ஆரம்பத்தில் ஸ்லோவான தொடக்கம் தானே இருக்கும் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் ஆரம்பத்திலேயே அதிரடி சர்ப்ரைஸ் கொடுத்து மிரட்ட போகிறார்.

author avatar
Saranya M
Continue Reading

More in Cinema News

To Top