எப்பா கடவுளே இது ஒன்னு மட்டும் போதும்! ஆண்டவனிடம் ரஜினிக்கு இருக்கிற ஒரே வேண்டுதல் இதுதானாம்

Published on: October 14, 2023
rajini
---Advertisement---

Rajini’s Spirituality: தமிழ் சினிமாவில் ரஜினியின் இடம் என்பது யாரும் எட்டமுடியாத உயரமாகவே பார்க்க முடிகிறது. ஆனால் அவர் இடத்தை அடையவேண்டும் என ஒரு சில நடிகர்கள் போட்டிப் போட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர்.

அவருடைய பட்டத்தை பறிக்கவே ஒரு சில கூட்டம் முயற்சித்து வருகிறது. ஜெயிலரின் வெற்றி தமிழ் சினிமாவில் ரஜினி ஒரு பென்ச் மார்க்கை உருவாக்கிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அவருடைய படமான 2.0க்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக வசூலை பெற்ற படமாக ஜெயிலர் படம் அமைந்தது.

இதையும் படிங்க: கடுப்பில் இருக்கும் விஜய் தேவரகொண்டா…! கிஸ் மட்டும் இல்லை… ஓவர் வெறுப்பேத்தும் ராஷ்மிகா..!

அடுத்ததாக த. ச.ஞானவேல் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு பிறகு லோகேஷுடன் இணைந்து தன்னுடைய 171வது படத்திலும் நடிக்க இருக்கிறார். ஏற்கனவே அவரின் கேமியோ ரோலில் லால்சலாம் படத்தின் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன.

சமீபகாலமாக ரசிகர்களை ஒரு எதிர்பார்ப்பில் வைத்திருக்கும் நடிகராகவே ரஜினி காணப்படுகிறார். இப்படி சினிமாவில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த் எந்தளவுக்கு ஒரு ஆன்மீகவாதி என அனைவருக்கும் தெரிந்திருக்கும்.

இதையும் படிங்க: ஸ்ரீதேவி பெத்த புள்ள இப்படி நிக்குதே!.. ஓவர் டோஸ் கிளாமரில் உசுர வாங்கும் ஜான்வி கபூர்!..

எப்பொழுது தனக்கு ஆன்மீகம் பிறந்தது என்பதை பற்றி முன்பு ஒரு நேர்காணலில் பகிர்ந்திருக்கிறார் சூப்பர் ஸ்டார். எப்பொழுது இந்த ஆன்மீகத்தில் தனக்கு நாட்டம் பிறந்தது என்று தெரியாது என்றும் ஆனால் சிறு வயதில் இருந்தே மூன்று விஷயம் என் மனதில் ஆழமாக இருந்தது என்றும் கூறினார்.

ஒன்று இமயமலை, அடுத்து அன்னப்பறவை கடைசியாக தாமரை. கடவுள் மீது நம்பிக்கை வந்ததற்கு பல காரணங்கள் இருக்கு. முக்கியமாக சொல்லவேண்டுமானால் அது  மிகப்பெரிய ஏரியா. ஆண்டவனிடம் பிரார்த்தனை பண்ணும் போது ஒவ்வொருவரும் வெவ்வேறு விதங்களில் பிரார்த்தனை செய்வார்கள்.

இதையும் படிங்க: 22 முறை மோதிய விஜயகாந்த் – கமல்ஹாசன் படங்கள் : அதிக ஹிட் கொடுத்தது யார் தெரியுமா?…

ஆனால் கடவுளிடம் எனக்கு இருக்கிற ஒரே வேண்டுதல் எப்பொழுது உன்னை நினைத்துக் கொண்டிருக்கும் மாதிரியான மனதை கொடு என்றுதான் வேண்டினாராம். இது ஒன்று மட்டும்தான் ரஜினிக்கு இருக்கிற வேண்டுதலாம்.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.