Cinema History
பிளான் பண்ணி என்னோட வாழ்க்கையை காலி பண்ணிட்டாங்க… விரக்தியில் சங்கமம் பட நடிகர்…
Actor Rahman: தமிழ் சினிமாவில் புதுபுது அர்த்தங்கள், பட்டிகாட்டான் போன்ற திரைப்படங்களின் மூலம் கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் ரகுமான். குறுகிய காலத்திலேயே தனது நடிப்பின் மூலம் உயர்ந்தவர் இவரே. இவர் மேலும் பில்லா 2, சிங்கம் 2, பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் கிராமத்து கதைகளை மையப்படுத்திய பல படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் நாட்டுபுற கலைஞர்களின் வாழ்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம்தான் சங்கமம். இப்படத்தினை இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். மேலும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார்.
இதையும் வாசிங்க:ரஜினியை ஏமாற்றிய சினிமா உலகம்!.. புரியவைத்து தூக்கிவிட்ட கமல்.. இவ்வளவு நடந்திருக்கா?!…
இப்படத்தில் நடிகர் ரகுமான் கதாநாயகனாகவும் அவருக்கு ஜோடியாக நடிகை விந்தியாவும் நடித்திருந்தனர். இப்படம் மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்று தந்தது. மேலும் இப்படத்தில் மணிவண்ணன், வடிவேலு, விஜயகுமார் போன்ற பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். இப்படத்தில் நடிகர் ரகுமான் நாட்டுபுற கலைஞராகவும் கதாநாயகியான விந்தியா பரதம் ஆடக்கூடிய பெண்ணாகவும் நடித்திருப்பார். இந்த இரு கலைகளுக்கும் இடையே ஏற்படும் போட்டியை மையப்படுத்திய கதையாக இப்படம் அமைந்திருக்கும். இப்படத்தின் இறுதிகாட்சியில் மணிவண்ணன் இறந்துவிடுவார்.
தந்தை இறந்த துக்கத்துடனும் அதே சமயம் எதிரிகளை தனது கலையின் மூலம் வெல்லும் நோக்கிலும் ரகுமான் மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம் பாடலில் ஆடியிருப்பார். மேலும் இப்பாடலுக்காக ரகுமான் மிகவும் சிரமப்பட்டு ஆடியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இதையும் வாசிங்க:வடிவேலுவை யாரும் குறை சொல்லாதீங்க… வக்காலத்து வாங்கிட்டு வரும் பிரபல காமெடி நடிகர்…
ஆனால் இந்த படம் வெளியான சில தினங்களிலேயே தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்டுவிட்டது. அப்போது ரகுமான் அதனை நினைத்து மிகவும் வருத்தத்தில் இருந்துள்ளார். இதனை பற்றி தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடமும் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் இதை பற்றி எதுவுமே கூறாமல் விட்டுவிட்டனராம். இப்படத்திற்காக ரகுமான் மிகவும் உழைத்தாராம். ரகுமான் நீண்ட நாட்கள் காத்திருந்து கிடைத்த படம்தான் இப்படம்.
மேலும் இப்படத்தின் படபிடிப்புகள் முடியும் வரை வேறு எந்தவொரு படத்திற்கும் ரகுமான் கால்ஷீட் கொடுக்கவில்லையாம். ஆனால் அப்படி தனது முழு உழைப்பையும் போட்டு நடித்த இப்படத்தினை விரைவாக தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பியது தனக்கு மிகுந்த வேதனையையும் கஷ்டத்தையும் அளித்ததாக சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரே தெரிவித்திருந்தார்.
இதையும் வாசிங்க:இதுவரை நடிக்காத கதையில் ரஜினி!. சம்பவம் செய்யப்போகும் தலைவர் 170!…