Connect with us
rajini kamal

Cinema History

ரஜினியை ஏமாற்றிய சினிமா உலகம்!.. புரியவைத்து தூக்கிவிட்ட கமல்.. இவ்வளவு நடந்திருக்கா?!…

Kamalhaasan: தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களுக்கும் மேல் முக்கிய நடிகர்களாக வலம் வருபவர்கள் ரஜினி – கமல். துவக்கத்தில் கமல் படங்களில்தான் ரஜினி நடித்து வந்தார். இருவரும் நண்பர்களாகவே பல படங்களில் நடித்தனர். சில படங்களில் கமலுக்கு வில்லனாகவும் ரஜினி நடித்திருந்தார்.

ரஜினி – கமல் போட்டி என்பது பல வருடங்களாகவே இருக்கிறது. கமலை தவிர வேறு யாரையும் தனக்கு போட்டியாக ரஜினி நினைப்பது இல்லை என்பது அவருடன் நெருக்கமாக பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். ஒரு கட்டத்தில் கமலை விட அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் ரஜினி மாறினார். கமலுக்கு பின்னால் சினிமாவில் அறிமுகமானாலும் சூப்பர்ஸ்டார் ஆனது என்னவோ ரஜினிதான்.

இதையும் படிங்க: இதுவரை நடிக்காத கதையில் ரஜினி!. சம்பவம் செய்யப்போகும் தலைவர் 170!…

ஆனாலும், கமல் மீது எப்போது நல்ல நட்பும்,அன்பும், மரியாதையும் வைத்திருப்பவர்தான் ரஜினி. அதேபோல்தான் கமலும். ரஜினி தனது திரைவாழ்வில் பல முக்கிய முடிவுகளை எடுக்க காரணம் கமல்தான் என்பது பலருக்கும் தெரியாது. நாம் இருவரும் ஒரே படத்தில் இணைந்து நடித்தால் ஹீரோவின் சம்பளத்தை இரண்டு பேருக்கும் பிரித்து கொடுக்கிறார்கள். எனவே, இனிமேல் தனித்தனியாக நடிப்போம் என ரஜினியிடம் சொல்லி அவரை தனி ரூட்டில் பயணிக்க வைத்ததே கமல்தான்.

அதன்பின்னரே ரஜினி தனி ஹீரோவாக நடித்து பல வெற்றிகளை கொடுத்து சூப்பர் ஸ்டராக மாறினார். ரஜினி கடந்த 20 வருடங்களுக்கு முன்பே கோடிகளில் சம்பளம் வாங்க துவங்கிவிட்டார். சில படங்களில் ரூ.100 கோடிக்கும் மேலும் வாங்கியிருக்கிறார். சில காரணங்களுகாகவும், முந்தையை படத்தின் வியாபாரத்தை வைத்தும் அவரின் சம்பளம் குறைவதும், கூடுவதும் உண்டு.

இதையும் படிங்க: அந்த நடிகர் மாதிரி நடிங்க!. ரஜினியிடம் வாயை விட்டு மாட்டிகொண்டு முழித்த பிரபல இயக்குனர்…

ஆனால், ரஜினி முதன் முதல் ஒரு கோடி சம்பளம் வாங்கவே காரணம் கமல்தான் என்பது பலருக்கும் தெரியாது. ஒருமுறை ரஜினியிடம் பேசிய கமல் ‘ரஜினி இனிமேல் நீங்கள் ஒரு கோடி சம்பளம் கேளுங்கள்’ என்றாராம். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ரஜினி ‘ஏன் கமல் என்னை இண்டஸ்ட்ரியில இருந்தே காலி பண்ண பாக்குறீங்க?’ என கேட்டாரம்.

அவருக்கு விளக்கம் சொன்ன கமல் ‘நீங்கள் நடிக்கும் படங்களில் என்ன லாபம் வருகிறது என்பதை உங்களிடம் வினியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் மறைத்து பொய் கணக்கை சொல்லி வருகிறார்கள்’ என சொல்லி ரஜினி படங்கள் எத்தனை கோடி வசூல் செய்கிறது என்பதை சொல்லி ‘நீங்கள் ஒரு கோடி கேளுங்கள்’ என சொல்ல, அதன் பின்னரே ரஜினியும் தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தி கேட்டுள்ளார். அது வளர்ந்து வளர்ந்து இப்போது ரூ.100 கோடியை தாண்டிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காத்திருந்து காத்திருந்து!.. 2 நாட்களாக புக் மை ஷோவில் குடியிருக்கும் சென்னை வாசிகள்.. லியோ பரிதாபங்கள்!

google news
Continue Reading

More in Cinema History

To Top