எம்.ஜி.ஆர் பார்முலாவை பின்பற்றும் சூப்பர்ஸ்டார்... அடுத்த வில்லன் யார் தெரியுமா?..

by sankaran v |   ( Updated:2024-04-28 17:58:59  )
Rajni
X

Rajni

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் நடித்த வில்லன்கள் குறித்து பிரபல விநியோகஸ்தர் தேனி கண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பைரவி படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஸ்ரீகாந்த் நடித்து இருப்பார். அந்த சமயத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாகவும் பரபரப்பாக நடித்து வந்த காலம். இவருக்கு அடுத்தபடியாக ரஜினி படங்களில் செந்தாமரை முக்கியமான வில்லன். மூன்று முகம் படத்தில் செம மாஸாக நடித்து இருந்தார். ரஜினிக்கு சவால்விடும் வகையில் மீசையை முறுக்கி என் பேரைச் சொன்னா கருவில இருக்குற குழந்தையும் வாயைப் பொத்திக்கிடும்னு சொல்வார்.

இதையும் படிங்க...லோகேஷ் போல நான் இல்லை… கோட் பட டிரைலரில் குறித்து வெங்கட் பிரபு சொன்ன சீக்ரெட்…

அதற்கு ரஜினி அதே குழந்தை என் பேரைச் சொன்னா தன் வாயையும் பொத்திக்கிட்டு அவங்க அம்மா வாயையும் பொத்திக்கிடும்னு சொல்வார். எம்ஜிஆர் எப்படின்னா, தன்னோட நடிக்கும் சக கலைஞர்களோட பாத்திரம் பலமா இருக்கணும். அப்போ தான் தன்னோட கேரக்டர் பேசப்படும்னு உறுதியா இருந்தார். இது தான் எம்ஜிஆர் பார்முலா. இதைத் தான் ரஜினியும் பின்பற்றினார்.

முரட்டுக்காளை படத்தில் கதை தயாரானதும் யார் வில்லன் என பலரும் பேசி வந்தார்கள். இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க ஜெய்சங்கரை தேர்ந்தெடுத்தார்களாம். ஆனால் அவரை எப்படி அந்த வேடத்தில் நடிக்க வைப்பது? அவர் கதாநாயகனாக நடித்துக் கொண்டு இருக்கிறாரே என்று சங்கோஜப்பட்டார்களாம். ஆனால், அந்தக் கதையை சொன்னதும் ஓகே என்று சொல்லிவிட்டாராம் ஜெய்சங்கர்.

அந்த விஷயத்தில் ரஜினி உறுதியாக சொன்னாராம். எந்த விளம்பரத்திலும் என்னோட படத்தைப் பெரிதாகவும், ஜெய்சங்கரின் படத்தை சின்னதாகவும் போடக்கூடாது என்றாராம். படத்திலும் ஜெய்சங்கருக்கு ரொம்பவே முக்கியத்துவம் தரும் வகையில் கேரக்டர் வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

சண்டைக்காட்சிகளிலும் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் ஜூடோ ரத்னம் எடுத்திருப்பார். ரஜினிக்கும், ஜெய்சங்கருக்கும் சமபலத்துடன் மோதுவது போன்று காட்சிகள் எடுக்கப்பட்டு இருக்கும். அது ஒரு டிரெய்ன் பைட். உயிரைப் பணயம் வைத்து எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி அது. கேமரா வியூவும் டெக்னிகலாக எடுக்கப்பட்டது. இந்தக்காட்சியில் ஜெய்சங்கரும், ரஜினியும் டூப் போடாமல் நடித்தார்களாம்.

இதையும் படிங்க...எல்லோரும் பயந்த டைட்டில்!.. துணிச்சலாக நடிச்ச ரஜினிகாந்த்!.. அஜித்துக்கும் வாழ்க்கை கொடுத்த படம்!

அந்த வகையில் மிஸ்டர் பாரத் படத்தில் சத்யராஜ், பாட்ஷா படத்தில் ரகுவரன் இருவரும் மிக முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்கள். தமிழ்த்திரை உலகில் ரஜினியை அடித்து விட்டு கைதட்டல் வாங்கிய ஒரே வில்லன் ரகுவரன் தான். மார்க் அண்டனி என்ற அந்தக் கேரக்டர் டெரராக இருக்கும். படையப்பா படத்தில் வில்லியாக நடித்தவர் ரம்யா கிருஷ்ணன்.

அடுத்த படத்தில் சத்யராஜ் வில்லனாக வரலாம் என்றும் பேசப்படுகிறது. சத்யராஜ் நடிக்கவே மாட்டார். அதைத் தவிர்ப்பதற்காக 5 கோடி கொடுத்தால் தான் நான் நடிப்பேன் என்று கூட சொல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story