எல்லோரும் பயந்த டைட்டில்!.. துணிச்சலாக நடிச்ச ரஜினிகாந்த்!.. அஜித்துக்கும் வாழ்க்கை கொடுத்த படம்!..

செண்டிமெண்ட் எல்லா துறைகளிலிலும் இருந்தாலும் திரையுலகில் அது மிகவும் அதிகம். பல விஷயங்களுக்கும் செண்டிமெண்ட் பார்ப்பார்கள். குறிப்பாக படத்தின் தலைப்பில் நிறைய செண்டிமெண்ட்டுகளை பலரும் வைத்திருந்தனர். டி.ராஜேந்தர் தனது படங்களின் தலைப்பை 9 எண்களில் வைப்பார்.

அதுதான் அவரின் செண்டிமெண்ட். மைதிலி என்னை காதலி, உறவை காத்த கிளி, என் தங்கை கல்யாணி, என் தாயின் சபதம், உயிருள்ள வரை உஷா என உதாரணங்களை சொல்ல முடியும். படத்திற்கு தலைப்பு என்பது மிகவும் முக்கியம். அதனால்தான் இயக்குனரும், தயாரிப்பாளரும் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெள்ளி விழா படங்கள்… வருடக்கணக்கில் ஓடிய சந்திரமுகி..

தலைப்பு தொடர்பாக பல ஆலோசனையும் செய்வார்கள். ஒரு இயக்குனர் படம் முடிவடையும் தருவாயில் படத்திற்கு 4, 5 தலைப்புகளை யோசிப்பார். அதை தனது உதவியாளர்கள், நலம் விரும்பிகள் ஆகியோருடன் ஆலோசனை செய்வார். ஏனெனில், ஒரு படத்தின் அடையாளமே அதன் தலைப்புதான். காலத்திற்கு அப்படம் ரசிகர்களால் நினைவு கூறப்படுவது தலைப்பை வைத்துதான்.

மிகவும் நெகட்டிவாக தலைப்பு வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் படம் ஓடாது என்கிற செண்டிமெண்ட்டை விஜய் ஆண்டனி தனது பிச்சைக்காரன், எமன், சைத்தான் ஆகிய படங்கள் மூலம் உடைத்தார். தொடர்ந்து அவர் தயாரித்து நடிக்கும் படங்களில் அப்படித்தான் தலைப்பும் வைத்து வருகிறார்.

இதையும் படிங்க: பாட்ஷா படத்துல ரஜினி ஆட்டோ டிரைவரா நடிக்க காரணமே வடிவேலுதான்!.. என்னப்பா சொல்றீங்க!..

ரஜினி நடிப்பில் 1980ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் பில்லா. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ஒரு படத்தின் தமிழ் ரீமேக் இது. இந்த படம் உருவான போது இதற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என யோசித்திருக்கிறார்கள். 78 காலகட்டத்தில் பில்லா, ரங்கா என 2 கொடூரமான கேங்ஸ்டர்கள் இருந்தார்கள். ஒரு ராணுவ அதிகாரியின் மகனையும், மகளையும் கடத்தில் கொலை செய்தார்கள்.

அப்போது தயாரிப்பாளர் பாலாஜி தான் எடுத்த படத்திற்கு பில்லா என பெயர் வைத்தார். ரஜினியின் நலவிரும்பிகள் அவரிடம் ‘இந்த தலைப்பு நெகட்டிவாக இருக்கும். மாற்ற சொல்லுங்கள்’ என சொல்ல, ரஜினியோ கூலாக ‘என்னை குடிகாரன், பைத்தியக்காரன் என்றெல்லாம் பத்திரிக்கையில் எழுதுகிறார்கள். இது மட்டும் என்ன?. இந்த தலைப்பிலேயே நான் நடிப்பேன்’ என்ப சொல்லி துணிச்சலாக நடித்திருக்கிறார். இந்த படம் சூப்பர் ஹிட். இந்த படத்திற்கு பின் ரங்கா என்கிற தலைப்பிலும் ரஜினி ஒரு படத்தில் நடித்தார். அதேபோல், அஜித்தும் அதே படத்தை ரீமேக் செய்து பில்லா என்கிற தலைப்பிலேயே நடித்தார். அதுவும் வெற்றிப்படமாக அமைந்தது.

 

Related Articles

Next Story