Connect with us
rajini

Cinema History

அந்த நடிகர் மாதிரி நடிங்க!. ரஜினியிடம் வாயை விட்டு மாட்டிகொண்டு முழித்த பிரபல இயக்குனர்…

Rajinikanth: அபூர்வ ராகங்கள் திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து விதவிதமான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ரஜினிகாந்த். துவக்கத்தில் கமலுடன் இணைந்து பல படங்களில் நடித்த ரஜினி ஒரு கட்டத்தில் தனி ஹீரோவாக நடிக்க துவங்கினார்.

தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் நடித்தார். அவரின் படங்கள் வசூலை வாரிக்குவிக்கவே அவருக்கு சூப்பர்ஸ்டார் பட்டமும் கிடைத்தது. 80களில் துவங்கி இப்போதுவரை அந்த இடத்தை யாராலும் தொடமுடியவில்லை. இப்போது கூட 72 வயதில் ஜெயிலர் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: படையப்பாவுக்கு பரிசாக கிடைத்த ஆறுபடையப்பா!.. சூட்டிங் ஸ்பாட்டில் கிடைத்த ஆசிர்வாதம்.. வைரலாகும் பிக்ஸ்!

இப்போது ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இது ரஜினியின் 170வது திரைப்படமாகும். இந்த படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். லோகேஷ் கனகராஜ் மீது பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த படத்திற்கு இப்போது எதிர்பார்ப்பு எகிறி வருகிறது.

ரஜினி பல இயக்குனர்களுடன் வேலை செய்துள்ளார். பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இயக்குனருக்கு பிடிக்கவில்லை என்றால் அவருக்கு திருப்தி ஏற்படும்வரை நடித்தும் கொடுப்பார். ஆனால், அவரிடமே வேறு ஒரு நடிகரை ஒப்பிட்டு வாய் விட்டு மாட்டிக்கொண்ட இயக்குனர் பற்றித்தான் இங்க பார்க்க போகிறோம்.

இதையும் படிங்க: லியோ FDFS பார்க்க ரெடியான ரஜினிகாந்த்!.. பின்ன அடுத்த படத்தை லோகேஷை நம்பி கொடுத்துருக்காரே!..

சத்யா திரைப்படம் மூலம் இயக்குனரானவர் சுரேஷ் கிருஷ்ணா. ரஜினியை வைத்து வீரா, அண்ணாமலை, பாட்ஷா, பாபா ஆகிய திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். சுரேஷ் கிருஷ்ணா தமிழில் படங்களை இயக்குவதற்கு முன் பாலிவுட் படங்களில் வேலை செய்திருக்கிறார். ஒருமுறை படப்பிடிப்பில் ரஜினியிடம் ‘சார் இந்த காட்சியில் அமிதாப்பச்சன் இப்படி நடிப்பார்.. அப்படி நடிப்பார்’ என அடிக்கடி சொல்லிருக்கிறார்.

ஒருமுறை அவரை அழைத்த ரஜினி ‘எனக்கு நடிக்க தெரியதா?.. நான் அமிதாப்பச்சன் போல நடிக்க வேண்டுமா?’ என கேட்டுள்ளார். அதற்கு சுரேஷ் கிருஷ்ணா ஏதோ சொல்லி சமாளிக்க ரஜினியும் அதை ஜாலியாக எடுத்துக்கொண்டாராம். ஆனாலும், அவரின் இயக்கத்தில் பாட்ஷா, அண்ணாமலை போன்ற சூப்பர் ஹிட் படங்களில் ரஜினி நடித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரஜினியோட கடைசி படமா? அடுத்தடுத்து என்னென்ன படம் நடிக்க போறாரு தெரியுமா? லோகேஷிடம் இத கொஞ்சமும் எதிர்பார்க்கல

google news
Continue Reading

More in Cinema History

To Top