Connect with us

Cinema News

காத்திருந்து காத்திருந்து!.. 2 நாட்களாக புக் மை ஷோவில் குடியிருக்கும் சென்னை வாசிகள்.. லியோ பரிதாபங்கள்!

பெங்களூர், கேரளா, வெளிநாடுகள் என லியோ டிக்கெட் புக்கிங் அனல் பறந்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் சென்னையை தவிர்த்து பல ஊர்களில் டிக்கெட் விற்பனை செம ஃபயராக நடைபெற்று வருகிறது.

ஆனால், சென்னையின் நிலைமையோ அப்படியே தலைகீழாகத்தான் இருக்கிறது. கடந்த 2 நாட்களாக காத்திருந்து காத்திருந்து.. காலங்கள் போனதடி என பாடும் வைதேகி காத்திருந்தாள் விஜயகாந்தாகவே விஜய் ரசிகர்கள் மாறிவிட்டனர்.

இதையும் படிங்க: இளையராஜாவின் குரலில் உருவான எம்ஜிஆர் பாடல்! இதுவரைக்கும் யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம்..

மற்ற இடங்களில் உள்ள ரசிகர்கள் டிக்கெட்டுகளுடன் போட்டோக்களை போட்டு வெறுப்பேற்றி வரும் நிலையில், சென்னையில் உள்ள பல முக்கிய திரையரங்குகளில் இன்னமும் டிக்கெட் புக்கிங் தொடங்காமல் கடைசி நேரம் வரை கழுத்து அறுத்து வருகின்றனர்.

நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் என்றாலே எந்த அரசாக இருந்தாலும் ரிலீஸ் நேரம் வரை ஏன் பஞ்சாயத்து நடக்கிறது? என்கிற கேள்வியையும் ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கேரளா ரசிகர்களின் கெத்தே தனி தான்!.. எவ்ளோ பெரிய கட் அவுட்.. பக்கெட்டில் பால் ஊத்துறாங்களே!..

சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி என முதலில் நேரத்தை குறிப்பிடாமல் சொல்லிவிட்டு, பின்னர், காலை 7 மணி காட்சிக்கு அனுமதி என்று அறிவிப்பதெல்லாம் என்ன நியாயம். தயாரிப்பு நிறுவனம் வைத்த கோரிக்கையில் 7 மணிக்கான சிறப்புக் காட்சிக்குத்தான் அனுமதி கேட்டிருந்தனர். அதற்கு அனுமதி என்றும் சொல்லிவிட்டு, பின்னர் 9 மணிக்குத்தான் முதல் ஷோ போட வேண்டும் என்றும் கூறியதையே ரசிகர்கள் ஜீரணிக்க முடியாத நிலையில், கடந்த 2 நாட்களாக புக் மை ஷோவில் அடிக்கடி போய் செக் செய்து தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்கப்பட்டுள்ளதா என ரசிகர்கள் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகி வருகின்றனர்.

அதுதொடர்பான மீம்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று புக் மை ஷோவில் டிக்கெட் புக்கிங் சென்னை ஏரியாவில் தொடங்கவில்லை என்றால் விஜய் ரசிகர்கள் மனதளவில் ரொம்பவே பாதிக்கப்படுவது உறுதி. இன்னும் 3 நாட்களில் படம் ஆரம்பமாக உள்ள நிலையில், கடைசி நேரத்தில் புக்கிங் ஓபன் செய்தால் புக் மை ஷோ சர்வரும் ஸ்தம்பித்து விடும் என்கின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top