அதிரடி காட்டும் அனுபமா பரமேஸ்வரன்!.. அடுத்தடுத்து இத்தனை படங்களில் கமிட் ஆகியுள்ளாரே!..

பிரேமம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுபமா பரமேஸ்வரன் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு ஏற்கனவே அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் சைரன் 108 மற்றும் டில்லு ஸ்கொயர் என 2 படங்கள் வெளியாகின.

தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த அனுபமாவுக்கு பெரிய வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், தெலுங்கில் சித்துவுடன் இணைந்து நடித்த டில்லு ஸ்கொயர் படம் 125 கோடி வசூலை ஈட்டியது.

இதையும் படிங்க: பாத்ததும் ஷாக் ஆயிட்டோம்!.. டிரெஸ்ஸே அப்படித்தானாம்!.. கிளுகிளுப்பு காட்டும் ஜான்வி கபூர்!..

அந்த பெரிய வெற்றிக்குப் பிறகு அனுபமா பரமேஸ்வரன் தனது படங்களின் அறிவிப்பை வரிசையாக வெளியிட்டு வருகிறார் பர்தா எனும் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட அனுபமா பரமேஸ்வரன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பைசன் படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

பைசன் படத்தின் அப்டேட் மட்டுமின்றி லைகா நிறுவனம் தயாரிப்பில் இந்த ஆண்டு உருவாகவுள்ள லாக்டவுன் படத்திலும் அனுபமா பரமேஸ்வரன் தான் லீடு ரோலில் நடிக்கிறார் என்கிற அறிவிப்பை சற்று முன் லைகா நிறுவனம் வெளியிட்டது.

இதையும் படிங்க: இளையராஜாவும் வைரமுத்துவும் பிரிந்ததால் இழப்பு யாருக்கு?.. வாங்க பார்ப்போம்!…

தொடர்ந்து பல படங்களில் அனுபமா பரமேஸ்வரன் நடித்து வரும் நிலையில், இந்த ஆண்டு மற்ற நடிகைகளை ஓவர்டேக் செய்து விட்டு அதிக சம்பளத்தை அள்ளி வருவதாக கூறுகின்றனர்.

ஒரு படத்துக்கு 75 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வரும் கொடி படத்தின் நாயகி அனுபமா பரமேஸ்வரன் இனிமேல் 2 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளத்தை உயர்த்தி விடுவார் என தெரிகிறது.

இதையும் படிங்க: பெரிய படத்துக்கு நோ சொன்ன பிரபல இயக்குனரின் அப்பா… ராஜா ராணி படத்தில் அசிங்கப்படுத்திய அட்லீ…

 

Related Articles

Next Story