பெரிய படத்துக்கு நோ சொன்ன பிரபல இயக்குனரின் அப்பா... ராஜா ராணி படத்தில் அசிங்கப்படுத்திய அட்லீ…
Atlee: தமிழ் சினிமாவில் சில படங்கள் செய்த இயக்குனருக்கு புகழ் கிடைப்பது பெரிய விஷயம். ட்ரோல்கள் இருந்தாலும் உச்ச இயக்குனரின் பட்டியலில் இருக்கும் அட்லீ தற்போதைய இயக்குனரின் அப்பாவிடம் நடந்துக்கொண்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
முதல் படத்தில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா என இரண்டு மெயின் ஜோடிகளை வைத்து இயக்கி இருந்தார் அட்லீ. அப்படம் மௌனராகம் படத்தின் காப்பி எனக் கலாய்க்கப்பட்டாலும் படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இப்படத்தினை தொடர்ந்து வரிசையாக விஜயின் நடிப்பில் மூன்று படங்களை இயக்கினார்.
இதையும் படிங்க: நீங்க பண்றது உங்களுக்கே நல்லா இருக்கா… பாக்கியலட்சுமியால் கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்…
எல்லா படத்துக்குமே ட்ரோல்கள் வந்தாலும் படத்தின் வசூல் வேற லெவலில் இருந்தது. இதை தொடர்ந்து ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தினை இயக்கி இருந்தார். படத்தில் அந்த படத்தின் காப்பி என லிஸ்ட் சொல்லப்பட்டாலும் 1000 கோடி வசூலை தாண்டியது. அட்லீயின் முதல் படமான ராஜா ராணி படத்தில் ஜெயின் தந்தையாக நடித்தவர் பாண்டியன்.
இவருக்கு முதல் வாய்ப்பே ராஜா ராணி படத்தில் தான் கிடைத்ததாம். ஆனால் அதே நேரத்தில் 75000 சம்பளத்தில் வேறு ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் வந்ததாம். ஆனால் அந்த படத்தினை நிராகரித்த பாண்டியன் ராஜா ராணி படத்தில் நடித்திருப்பார். ஆனால் அவருக்கு 3500 ரூபாய் தான் சம்பளமாக கொடுத்தார்களாம். தான் ஏற்கனவே நிராகரித்த படத்தின் சம்பளத்தினை அட்லீயிடம் கூறி இருக்கிறார் பாண்டியன்.
இதையும் படிங்க: என் அப்பாவுக்காக தான் இந்த படம்… ஸ்டார் இயக்குனர் சொன்ன சீக்ரெட்… இவரை மறக்க முடியுமா?
இதை கேட்ட அட்லீ சிரித்துக்கொண்டே இன்னும் 500 ரூபாய் போட்டு தரச் சொல்லுகிறேன் எனக் கூறி சென்றாராம். ஆனால் அவர் சின்ன நடிகராக கஷ்டப்பட்டாலும் அவரின் மகன் தற்போது வைரல் இயக்குனர். புகைப்படக்காரரான தனது தந்தைக்கு 55 வயதில் தான் முதல் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு தான் தன்னுடைய இரண்டாம் படமான ஸ்டார் சமர்ப்பணம் எனக் இயக்குனர் இளன் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கவின் நடிப்பில் ஸ்டார் திரைப்படம் வரும் மே 10ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.